நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ரிஷப் பண்ட் இல்லையா? அவருக்கு பதில் இந்த அதிரடி வீரரா?
நியூசிலாந்து அணிக்கு எதிரான வரவிருக்கும் ஒருநாள் தொடரில், இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக அதிரடி வீரர் இஷான் கிஷன் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2024 ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு எதிராக விளையாடிய பிறகு, பண்ட் ஒருநாள் போட்டிகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதே சமயம், இஷான் கிஷன் உள்நாட்டு போட்டிகளில் அபாரமான ஃபார்மில் உள்ளார்.
சமீபத்தில் நடந்த விஜய் ஹசாரே கோப்பையில் கர்நாடகாவுக்கு எதிராக 33 பந்துகளில் சதமடித்து இஷான் கிஷன் சாதனை படைத்தார். மேலும், ஜார்கண்ட் அணியை சையத் முஷ்டாக் அலி கோப்பை வெற்றிக்கு வழிநடத்திய அவர், அந்த தொடரில் 517 ரன்களை குவித்தார்.
இந்த நிலையில் காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க தொடரை தவறவிட்ட கேப்டன் சுப்மன் கில், நியூசிலாந்து தொடரில் மீண்டும் அணியை வழிநடத்த தயாராகி வருகிறார். கிஷன் மற்றும் கில் ஆகியோரின் வருகை இந்திய ஒருநாள் அணியின் கட்டமைப்பில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும் என தெரிகிறது.
Edited by Siva
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


