ஒரே டி20 போட்டியில் 7 ரன்கள் கொடுத்து 8 விக்கெட்டுக்கள்.. உலக சாதனை செய்த பெளலர்..!

 

 

சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை எவரும் செய்யாத ஒரு மாபெரும் சாதனையை பூடான் நாட்டை சேர்ந்த இளம் வீரர் சோனம் யெஷே நிகழ்த்தியுள்ளார். 

 

மியான்மர் அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 7 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தி, சர்வதேச டி20 போட்டிகளில் 8 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் என்ற உலக சாதனையை அவர் தன்வசப்படுத்தியுள்ளார்.

 

கடந்த டிசம்பர் 26 அன்று நடைபெற்ற இந்த போட்டியில், முதலில் ஆடிய பூடான் அணி 127 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய மியான்மர் அணி, 22 வயதான இளம் சுழற்பந்துவீச்சாளர் சோனம் யெஷேயின் சுழலில் சிக்கி சின்னபின்னமானது. வெறும் 4 ஓவர்கள் வீசிய அவர், 7 ரன்கள் மட்டுமே வழங்கி 8 விக்கெட்டுகளை அள்ளினார். இதனால் மியான்மர் அணி வெறும் 45 ரன்களுக்கு சுருண்டது.

 

இதற்கு முன்னதாக, 2023-ல் சீனாவுக்கு எதிரான போட்டியில் மலேசிய வீரர் சியாஸ்ருல் இட்ருஸ் 8 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் எடுத்ததே உலக சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையைச் சோனம் யெஷே முறியடித்துள்ளார். 

 

Edited by Mahendran

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.