கோமாவுக்கு சென்ற பிரபல கிரிக்கெட் வீரர்.. நலம் பெற ஆடம் கில்கிறிஸ்ட் பிரார்த்தனை..!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர பேட்டர் டேமியன் மார்ட்டின் கடுமையான உடல்நலக்குறைவு காரணமாக பிரிஸ்பேன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மூளைக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது அவர் கோமா நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும் ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த செய்தி கிரிக்கெட் உலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மார்ட்டினின் முன்னாள் சக வீரர்களான ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் டேரன் லீமன் ஆகியோர், அவர் விரைவில் நலம்பெற வேண்டி சமூக வலைதளங்களில் உருக்கமான பதிவுகளை இட்டுள்ளனர்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் மார்ட்டினின் குடும்பத்திற்குத் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளது. மார்ட்டின், ஆஸ்திரேலியாவிற்காக 67 டெஸ்ட் மற்றும் 208 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். குறிப்பாக, 2003 உலக கோப்பை இறுதி போட்டியில் இந்தியாவிற்கு எதிராக உடைந்த விரலுடன் விளையாடி ஆட்டமிழக்காமல் 88 ரன்கள் எடுத்தது இவரது கிரிக்கெட் வாழ்வின் மறக்க முடியாத தருணமாகும்.
Edited by Siva
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


