123 சர்வதேச விருதுகளை வென்ற படம் ‘த ஃபேஸ் ஆப் த ஃபேஸ்லெஸ்’
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் மத எல்லைகளைத் தாண்டி, பெண்கள் வளர்ச்சிக்காகத் தன்னலமற்ற சேவைகளை செய்தவர், கன்னியாஸ்திரி ராணி மரியா. அவர் வாழ்க்கைச் சம்பவங்களை மையப்படுத்தி உருவாகியுள்ள படம், ‘த ஃபேஸ் ஆப் த ஃபேஸ்லெஸ்’ (முகமற்றவரின் முகம்).
ட்ரை லைட் கிரியேஷன்ஸ் தயாரித்த இந்த திரைப்படம், 2024ம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. 123-க்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளை வென்ற இப்படத்தில், வின்சி அலாய்சியஸ், சோனாலி மொஹந்தி, ஜீத் மத்தாரு, அஜிஸ் ஜோசப் நடித்துள்ளனர். 136 நிமிடங்கள் ஓடும் இப்படம் இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழில் நவ.21ம் தேதி வெளியாகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
