தனுஷின் இந்திப் படத்தில் பிரபுதேவா
பாலிவுட் திரைப்பட இயக்குநர் ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம், ‘தேரே இஷ்க் மே’. இதில் தனுஷ், சங்கர் என்ற கதாபாத்திரத்திலும் கீர்த்தி சனோன், முக்தி என்ற கேரக்டரிலும் நடித்துள்ளனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இந்தி, தமிழில் உருவாகியுள்ள இந்தப் படம் நவ.28-ல் வெளியாக இருக்கிறது. வாராணசி பின்னணியில் உருவாகியுள்ள காதல் கதையை கொண்ட இப்படத்தில் பிரபுதேவா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்தகவல் இப்போது வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
