சங்கடஹர சதுர்த்தியோடு சேர்ந்து வரும் மைத்ரேய முகூர்த்தம்
பிரபஞ்ச ஆற்றல் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. பிரபஞ்ச ஆற்றலை சரியான முறையில் யார் ஒருவர் பயன்படுத்துகிறார்களோ அவர்களுடைய வாழ்க்கையில் வெற்றிகள் மட்டுமே இருக்கும். தோல்வி என்று பேச்சுக்கு கூட வராது. அந்த அளவிற்கு பிரபஞ்ச ஆற்றல் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அப்படிப்பட்ட பிரபஞ்ச ஆற்றலை பயன்படுத்தி சங்கடஹர சதுர்த்தியோடு சேர்ந்து வரக்கூடிய மைத்ரேய முகூர்த்தத்தில் வேண்டிய வரத்தை பெரும் முறையைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
சங்கடஹர சதுர்த்தி வழிபாடு
பொதுவாகவே நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய சங்கடத்தை நீக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாம் சங்கடஹர சதுர்த்தியில் விநாயகப் பெருமானை வழிபாடு செய்கிறோம். எப்பேர்ப்பட்ட சங்கடமாக இருந்தாலும் அந்த சங்கடம் தீர வேண்டும் என்று முழு மனதோடு தொடர்ச்சியாக விநாயகப் பெருமானை வழிபாடு செய்பவர்களுக்கு அந்த பிரச்சினைகள் தீரும் என்று கூறப்படுகிறது. இந்த சங்கடஹர சதுர்த்தியோடு சேர்ந்து மைத்ரேய முகூர்த்தமும் வருகிறது. பொதுவாக மைத்ரேய முகூர்த்தம் என்றதும் கடனை அடைப்பதற்குரிய நாள் என்று தான் நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட நாளில் பிரபஞ்ச பேராற்றலை பயன்படுத்தி வேண்டிய வரத்தை பெரும் முறையைப் பற்றி இப்பொழுது பார்ப்போம்.
செப்டம்பர் மாதம் பத்தாம் தேதி மாலை 6:44 மணிக்கு சங்கடஹர சதுர்த்தி ஆரம்பம் ஆகிறது. அன்றைய தினத்தில் இரவு 8:20 லிருந்து 10 மணி வரை மைத்ரேய முகூர்த்த நேரம் வருகிறது. சங்கடஹர சதுர்த்தியும் மைத்ரேய முகூர்த்த நேரமும் சேர்ந்து வரக்கூடிய இந்த அற்புதமான நாளில் நம்முடைய பிரச்சனைகள் தீர வேண்டும் என்ற வேண்டுதலை நேர்மறையான முறையில் பிரபஞ்சத்திடம் முன்வைக்க அது விரைவில் அப்படியே நடந்திடும்.
பொதுவாகவே ஒரு வழிபாட்டை செய்ய வேண்டும் என்றால் அந்த வழிபாட்டை செய்வதற்கு முன்பாக சுத்தமாக குளித்திருக்க வேண்டும். அந்த வகையில் இந்த மைத்ரேய முகூர்த்த நேரத்தில் நாம் செய்யக்கூடிய இந்த பிரபஞ்ச வழிபாட்டிற்கு கல் உப்பு கலந்த தண்ணீரில் சுத்தமாக குளித்து மங்களகரமாக தயாராகி பிறகுதான் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். மனமகிழ்ச்சியோடு நாம் செய்யக்கூடிய இந்த வழிபாடு நம்முடைய வாழ்க்கையில் என்றென்றும் மகிழ்ச்சியை கொண்டு வந்து சேர்க்கும். வெளியில் கிளம்பும் பொழுது எந்தளவிற்கு அழகாக தயார்படுத்திக் கொள்வோமோ அதே போல் தயாராகி வடக்கு திசை பார்த்தவாறு தரையில் ஒரு விரிப்பை விரித்து அதற்கு மேல் அமர்ந்து கொள்ள வேண்டும்.
சின் முத்திரையை வைத்துக் கொண்டு நம்முடைய வேண்டுதல் என்னவோ அது நடந்து விட்டது அதனால் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று முழுமனதோடு பிரபஞ்சத்திடம் கூற வேண்டும். உதாரணமாக நான் நினைத்தது போல் நல்ல சம்பளத்தில் நல்ல வேலை கிடைத்து மகிழ்ச்சியோடு இப்பொழுது இருக்கிறேன் என்று கூற வேண்டும். இப்படி நம்முடைய வேண்டுதலை நேர்மறையாக நடந்து விட்டது போல் நினைத்து முழு மனதோடு மகிழ்ச்சியோடு பிரபஞ்சத்திடம் திரும்பத் திரும்ப நாம் கூறுவதன் மூலம் பிரபஞ்சம் நம்முடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு நாம் சொன்னதை செய்து கொடுக்கும். இத்தனை முறைதான் வேண்டுதலை கூற வேண்டும் என்று கிடையாது. தங்களுக்கு எவ்வளவு சீக்கிரம் வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த அளவிற்கு அதிகமாக முழு மனதோடு கூற வேண்டும்.
இதையும் படிக்கலாமே: கடனை நீக்கும் ருண ஹர கணபதி வழிபாடு
நம்முடைய வார்த்தைகளுக்கென்று சக்திகள் இருக்கிறது. அதனால் தான் நல்லதை மட்டும் பேச வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அந்த வகையில் சங்கடஹர சதுர்த்தியோடு சேர்ந்து வரக்கூடிய மைத்ரேய முகூர்த்தத்தில் நேர்மறையான வேண்டுதலை முன்வைத்து வாழ்க்கையில் மகிழ்ச்சியை காண்போம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.
The post சங்கடஹர சதுர்த்தியோடு சேர்ந்து வரும் மைத்ரேய முகூர்த்தம் appeared first on Dheivegam.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.