என் உயிரும் உழைப்பும் மக்களுக்கே.. திருமணம் வேண்டாம்.. பாலா அதிரடி முடிவு
விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு சீசன் 6 டைட்டில் வின்னர் தான் பாலா. தனது அனல் பறக்கும் பேச்சால் கவுண்டர் அட்டாக் செய்து காமெடி பன்ச்களினால் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைப்பார். இவருக்கு பன்ச் பாலா என்ற பெயரும் இருக்கிறது.
ஒரு காலகட்டத்தில் விஜய் டிவியின் எல்லா நிகழ்ச்சிகளிலும் பாலாவை பயன்படுத்த தொடங்கி விட்டனர். பாலா இல்லாத நிகழ்ச்சியே விஜய் டிவி கிடையாது என்ற நிலை இருந்தது. அந்த அளவிற்கு பாலா தனது தனித்திறமையினால் உயர்ந்திருந்தார். தொடர்ந்து தன்னுடைய பாணியில் கலக்கிக் கொண்டிருந்த பாலாவுக்கு அவர் எதிர்பார்த்தது போலவே வெள்ளித்திரியிலும் வாய்ப்பு கிடைத்தது.
சின்ன சின்ன கதாபாத்திரங்கள், காமெடி வேடங்கள் என தனக்கு கிடைக்கப்பெற்ற வாய்ப்புகளை முறையாக பயன்படுத்திக் கொண்டார். அப்படிப்பட்ட நிலையில் ஒரு கலைஞன் தனக்கு வரும் படங்களில் நடித்து அடுத்த கட்டங்களுக்கு நகர்வது மட்டுமின்றி அப்படி வரும் பணத்தை சேமித்து வைத்து வீடு, கார், நிலம் என முதலீடு செய்வது தான் பலரின் வழக்கமாக இருக்கும். ஆனால் கேபிஒய் பாலா தனக்கு கிடைக்க கூடிய பணத்தில் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வருகிறார். பாலாவை பார்த்த நடிகர் ராகவா லாரன்ஸ், தற்போது இருவரும் இணைந்து மக்களுக்கு தேவையான சிறு சிறு உதவிகளை செய்து கொடுத்து வருகின்றனர்..

பாலாவின் மனதை பார்த்து அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்த ராகவா லாரன்ஸ், ஒரு முறை அவரிடமே கேட்டார், ’உனக்கு என்ன வேண்டும்’ என்று அதற்கு பாலா.’ அண்ணா நான் ஹீரோவாக வேண்டும்’ என்று சொல்லி இருந்தார். உடனே ராகவா லாரன்ஸ் அதற்கு சம்மதம் தெரிவித்தார். கூடிய விரைவில் ராகவா லாரன்ஸ் தயாரிப்பில் பாலா ஹீரோவாக நடிக்கும் திரைப்படம் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கு முன்னர் பாலா ”காந்தி கண்ணாடி” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆகிவிட்டார். கடந்த வாரம் வெளியான இந்த திரைப்படம் தற்போது வரை பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. முதல் படத்திலேயே செண்டிமெண்ட் மற்றும் எமோஷன் காட்சிகள் நிறைந்திருந்ததால் குடும்ப ரசிகர்கள் கொண்டாடும் படமாக காந்தி கண்ணாடி படம் இருக்கிறது.
இந்நிலையில் எனக்கு இப்போ கல்யாண வயசு வந்துடுச்சுடி என்ற பாடலை பாலாவிற்கு டேக் செய்ய ஆரம்பித்துள்ளனர். அதாவது பாலாவுக்கு எப்பொழுது திருமணம் என்று அவரை விடாமல் துரத்தும் கேள்வியாக இருக்கிறது சமீபத்திய பேட்டியில் அதற்கு பதில் அளித்த பாலா,” நான் சம்பாதிப்பது மக்களுக்காகத்தான் கடைசி வரை இப்படி செய்ய வேண்டும் என நினைக்கிறேன். கல்யாணம் குறித்து தற்போது எனக்கு எந்த ஐடியாவும் இல்லை.
எனக்கென நிறைய கடமைகள் உள்ளன. கடந்த ஐந்து வருடமாக என்னை மதித்து மக்கள் கோரிக்கை மனுக்கள் அளித்து வருகின்றன. மணுக்கள் அளிக்கும் மக்களுக்காக ஓடிக்கொண்டிருக்கிறேன், என்பதால் தற்போது திருமணம் செய்யும் எண்ணம் எனக்கில்லை”. என்று கூறியுள்ளார். என் உயிரும் உடலும் உழைப்பும் தமிழ் மக்களுக்கே.. என்ற கோட்பாடு உடன் ஓடிக்கொண்டிருக்கிறார் கே பி ஒய் பாலா.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.