கடனை நீக்கும் ருண ஹர கணபதி வழிபாடு
விநாயகப் பெருமானுக்கு உகந்த திதியாக திகழ்வதுதான் சதுர்த்தி திதி. அதிலும் தேய்பிறையில் வரக்கூடிய சதுர்த்திக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுப்பதுண்டு. காரணம் இது நம்முடைய சங்கடங்கள் அனைத்தையும் நீக்கக்கூடிய திதியாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட சங்கடஹர சதுர்த்தி திதி வரக்கூடிய நாளில் நாம் செய்யக்கூடிய ஒரு வழிபாடு நம்முடைய கடன் தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கும். அந்த வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ருண ஹர கணபதி வழிபாடு
நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான கஷ்டங்களையும் தீர்ப்பதற்கு விநாயகப் பெருமானை வழிபாடு செய்ய உகந்த நாளாக தான் சங்கடஹர சதுர்த்தி நாள் திகழ்கிறது. அன்றைய நாளில் நாம் விநாயகர் பெருமானை ஒரு குறிப்பிட்ட விதத்தில் வழிபாடு செய்யும்பொழுது நம் வாழ்வில் இருக்கக்கூடிய கடன் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் தீரும். இந்த கடன் தொடர்பான பிரச்சினையை தீர்ப்பதற்கு ருணஹர கணபதியை நாம் வழிபாடு செய்ய வேண்டும். வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் ருணஹர கணபதியை வழிபாடு செய்யும் முறையைப் பற்றி இப்பொழுது பார்ப்போம்.
செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி புதன்கிழமை அன்று மாலை 6:44 மணிக்கு சதுர்த்தி திதி ஆரம்பமாகி செப்டம்பர் மாதம் 11-ம் தேதி வியாழக்கிழமை அன்று மாலே நான்கு மணியளவில் நிறைவடைகிறது. அதனால் சதுர்த்தி வழிபாட்டை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி மாலை 6:44 மணிக்கு மேல் செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக 7 மணியிலிருந்து 7:40க்குள் நாம் இந்த வழிபாட்டை செய்து முடித்து விட்டால் கண்டிப்பான முறையில் ருணகர கணபதியின் அருளால் நம்முடைய கடன் பிரச்சினை தீரும்.
செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி காலையிலேயே பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் ஒரு அரச இலையில் மேல் மஞ்சளில் பிள்ளையாரை பிடித்து வைக்க வேண்டும். இந்தப் பிள்ளையாரை பிடித்து வைப்பதற்கு முன்பாக ஒரு ரூபாய் அல்லது ஐந்து ரூபாய் நாணயத்தை பன்னீரால் சுத்தம் செய்து அந்த இலையின் மீது வைத்து அந்த நாணயத்திற்கு மேல் மஞ்சளில் பிடித்து வைத்த பிள்ளையாரை வைக்க வேண்டும். பிறகு பிள்ளையாருக்கு மலர்கள் மற்றும் அருகம்புல்லை சாற்றி, இன்றைய நாளில் ருணகர கணபதியை நினைத்து விரதம் இருக்க போகிறேன் அவரின் அருள் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று கடன் பிரச்சினை முற்றிலும் தீர வேண்டும் என்று வேண்டிக்கொண்டு விரதத்தை ஆரம்பிக்க வேண்டும்.
மாலை நேரத்தில் தான் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு செய்ய வேண்டும் என்பதால் சதுர்த்தி திதி ஆரம்பமான பிறகு நாம் காலையில் மஞ்சளில் பிடித்து வைத்த பிள்ளையாருக்கு ஒரு ரூபாய் நாணயங்கள், அருகம்புல், பச்சை கற்பூரம், அட்சதை, மலர்கள் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து ருணஹர கணபதியின் மந்திரத்தை 108 முறை கூறி மஞ்சள் பிள்ளையாருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சனை செய்து முடித்த பிறகு பிள்ளையாருக்கு ஏதாவது ஒரு இனிப்பு பொருளை நெய்வேத்தியமாக வைத்து முழு மனதோடு ருணங்கள் அனைத்தும் நீங்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு பிறகு ருணகர கணபதியின் நாமத்தை 27 முறை கூறி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ள வேண்டும்.
மந்திரம்
” ஓம் கணேச ருணம் சிந்தி வரேன்யம் ஹிம் நமபட்
ஓம் ருணஹர கணபதியே நமோ நம “
இதையும் படிக்கலாமே: 48 நாட்கள் கந்த சஷ்டி விரத வழிபாடு
சங்கடஹர சதுர்த்தி நாளில் நம் வாழ்க்கையை பெரிதும் பாதிக்க கூடிய கடனை தீர்க்கும் அற்புதமான இந்த வழிபாட்டை முழு நம்பிக்கையோடு செய்து நிம்மதியான வாழ்க்கையை வாழ்வோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.
The post கடனை நீக்கும் ருண ஹர கணபதி வழிபாடு appeared first on Dheivegam.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.