Madhampatti Rengaraj: குழந்தையை அழிக்க ப்ளான் போட்ட மாதம்பட்டி ரங்கராஜ்! வெளிவரும் பல திடுக்கிடும் தகவல்
Madharampatti Rengaraj: தற்போது சோசியல் மீடியாவில் கொளுந்துவிட்டு எரிகிறது மாதம்பட்டி ரெங்கராஜன் பற்றிய செய்தி. ஆனால் எதுவுமே நடக்காத மாதிரி இன்னும் வெளியில் கம்பீரமாக சுற்றிக் கொண்டிருக்கிறார். இதைப் பற்றி வலைப்பேச்சு அந்தணன் பல செய்திகளை பகிர்ந்திருக்கிறார். அதாவது சரவணபவன் அண்ணாச்சியும் மாதம்பட்டியும் ஒண்ணா என்று கேட்டால் கிட்டத்தட்ட ஒண்ணுதான். அவரும் சமையல்காரர். தன்னிடம் வேலைபார்த்த பெண்ணுடன் தான் தொடர்பில் இருந்தார்.
அதே போல்தான் மாதம்பட்டியும் தன்னிடம் வேலைபார்த்த ஜாயுடன் பழகி இப்போது அவர் வயிற்றில் ஒரு குழந்தையும் கொடுத்திருக்கிறார். ஆனால் விஜய் டிவியில் பாமர மக்கள் அனைவரும் பார்க்கக்கூடிய நிகழ்ச்சியாக மாறிவிட்டது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. அப்படிப்பட்ட புகழ்பெற்ற நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் மாதம்பட்டியை முதலில் மக்கள் பார்க்கும் போது புன்முறுவலுடன் பார்க்க ஆரம்பித்தனர்.
ஏனெனில் அவருடைய சிரிப்பு, அழகு என அனைவரையும் கவர்ந்தது. ஆனால் இப்போது அவரை பற்றி வெளியாகக் கூடிய செய்தியை பார்த்த பிறகு ஒருமையில் திட்ட ஆரம்பித்துவிட்டனர். இதனால் அவருடைய எதிர்காலம் என்னாகும் என்பதுதான் கேள்வி. இதில் ஜாய் கிறிஸ்ல்டா அவரை பற்றி இப்போது முதல்வருக்கே டேக்ஸ் செய்து புகார் அளித்திருக்கிறார். பல நாள்களாக புகார் கொடுத்தும் போலீஸ் அந்த புகாரை எடுக்கவில்லை என்பதால் முதல்வருக்கே அதை டேக் செய்து புகார் கொடுத்திருக்கிறார்.
இன்னொரு பக்கம் செல்வாக்கில் மிகவும் உயர்ந்தவராக இருக்கிறார் மாதம்பட்டி. ஆனால் ஜாய் கிறிஸ்ல்டா? அதனால் நீதி யார் பக்கம் இருக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். சரி. எப்படி மாதம்பட்டி மீது இப்படியொரு கோபம் ஜாய் கிறிஸ்ல்டாவுக்கு வந்தது என்பதை பார்க்கும் போது ஒரு சமயம் மாதம்பட்டி போனை கிறிஸ்ல்டா செக் செய்திருக்கிறார். அதில் தன் நண்பருடன் மாதம்பட்டி பேசியதை ரிக்கார்டு மூலமாக கேட்டிருக்கிறார் ஜாய்.
அதில் வயிற்றில் இருக்கும் குழந்தையை எப்படி அழிக்கலாம்? ஜூஸில் மருந்து கலந்து கொடுத்தால் அழிந்துவிடும் என எதிர் நண்பர் கூற அந்த ரிக்கார்டை ஜாய் கேட்டிருக்கிறார். அதிலிருந்துதான் மாதம்பட்டி மீதிருந்த நம்பிக்கை போக இப்போது கமிஷன்ர் அலுவலகம் வரை அவர் படியேறியிருக்கிறார்.
அதுமட்டுமில்லாமல் என்னை போல் இன்னும் நிறைய பேர் வருவார்கள் என்றும் ஜாய் கூறியிருக்கிறார். இதில் மாதம்பட்டி கொஞ்சம் மனசு வைத்து ஜாய் கிறிஸ்ல்டாவை அழைத்து சுமூகமாக பேசியிருந்தால் இவ்ளோ தூரம் பிரச்சினை வந்திருக்காது. ஆனால் ஜாய் கிறிஸ்ல்டாவை அவாய்டு செய்ததோடு தனது போன் நம்பரையும் மாற்றி அவரை விட்டே ஒதுங்கி போய்விட்டார் மாதம்பட்டி ரங்கராஜ். இதுவும் ஒரு தவறான செயல்தான்.
வயிற்றில் குழந்தையை சுமந்து செல்லும் ஜாய் கிறிஸ்ல்டாவை பார்க்கும் போது ஒரு பக்கம் வருத்தம் இருந்தாலும் இரண்டு பேர் மீதும் தவறு இருக்கிறது என இந்த தகவலை அந்தணன் கூறியிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

