ஜெயிலரை சீண்டிய சிவகார்த்திகேயன்.. போற போக்குல ரஜினிக்கு ஒரு அடி

நீண்ட சருக்களுக்கு பிறகு ரஜினிக்கு ஒரு திருப்புமுனை ஏற்படுத்தி கொடுத்த திரைப்படம் ’ஜெயிலர்’. தர்பார்,அண்ணாத்த போன்ற படங்கள் ரஜினிக்கு பெருத்த அடியை கொடுத்தது. இதனால் தன்னுடைய பழைய ஃபார்முலாவை கைவிட்டு வயதிற்கு ஏற்ற கதாபாத்திரத்தில் நடித்து மீண்டும் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இந்த படம் ரஜினிக்கு மட்டும் முக்கியம் கிடையாது நெல்சனுக்கும் ரொம்ப ரொம்ப முக்கியமான திரைப்படம் ஏனென்றால் அவர் கடைசியாக இயக்கிய பீஸ்ட் திரைப்படம் அட்டர் பிளாப் ஆனது.

இருந்தாலும் ரஜினி, நெல்சனை கூப்பிட்டு வாய்ப்பு கொடுத்தார். இருவரும் தோல்வியில் இருந்து வருவதால் இந்த முறை கண்டிப்பாக பிளாக் பாஸ்டர் கொடுத்து ஆக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு இருவரும் தள்ளப்பட்டனர். இரவு, பகல் பாராமல் நெல்சன் இந்த படத்திற்காக தீவிரமாக உழைத்தார். மற்றொரு பக்கம் அனிருத்தின் இசை இந்த படத்திற்கு பக்கபலமாக அமைந்தது. குறிப்பாக காவலா பாடல் இந்த படத்தை மக்களிடையே கொண்டு போய் சேர்த்தது. தமன்னாவின் கவர்ச்சி இளசுகளை சொக்கி போட்டது என்றே சொல்லலாம்.

அதன் பின் வெளியான ஹுக்கும் பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அது மட்டும் இல்லாமல் படத்தில் மோகன் லால், சிவராஜ்குமார் போன்றோரின் கேமியோ படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்தது. படத்தின் கதை என்னவோ விக்ரம் படத்தின் பேஸ் போல தான் இருக்கும். இதில் என்ன வித்தியாசம் என்றால் ஸ்கிரீன் ப்ளேதான். அதை சிறப்பாக செய்திருப்பார் இயக்குனர் நெல்சன்.

#image_title

அதனால் இந்த படம் தப்பித்தது இல்லையென்றால் விக்ரம் படத்தை காப்பி அடித்து எடுத்து வச்சிருக்கான் என்று இந்த படத்தையும் ரசிகர்கள் கழுவி ஊற்றி யிருபார்கள். படம் வெளியாகி அவர்கள் எதிர்பார்த்ததை போலவே மாபெரும் பிளாக்பஸ்டர் ஆனது. படம் சுமார் 600 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக தகவல்கள் வெளிவந்தது. அது மட்டும் இல்லாமல் இந்த படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி மாறன் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் பரிசளித்தார்.

இதில் ரஜினி, நெல்சன் மற்றும் அனிருத் போன்றவர்களுக்கு உயர்தர லக்சரி கார்களை பரிசாக அளித்தார். இந்நிலையில் தற்போது ஜெய்லர் 2 படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டு வருகிறது.‌ இந்த முறை தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஆயிரம் கோடி வசூல் ரஜினி மட்டும் நெல்சன் இணைந்து கொடுக்க வேண்டும் என்பது தமிழ் சினிமா ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது. இதைப் பற்றி பேசிய சிவகார்த்திகேயன்,

” தமிழ் சினிமா ஆயிரம் கோடி மைல் கல்லை எட்டும் ஆனால் ஸ்டோரி குவாலிட்டி, பான் இந்தியா ரீச், டிக்கெட் விலை நார்த் இந்தியா பிரமோஷன் அவசியம் என்று தெரிவித்துள்ளார். மும்பை, பெங்களூரு மாதிரி டிக்கெட் விலை அதிகமாக வைத்திருந்தால் ஜெய்லர் படம் சுலபமாக ஆயிரம் கோடி தாண்டி இருக்கும். ஆனாலும் டிக்கெட் உயர்வை நான் ஆதரிக்கவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.