சம்பள விஷயத்தில் இறங்கி வந்த அஜித்.. டேக் ஆப் ஆகும் AK 64..
Ajithkumar 64 : குட் பேட் அக்லி திரைப்படத்தை இயக்கிய ஆதித் இரவிச்சந்திரன் இயக்கத்தில் மீண்டும் அஜித் நடிப்பதாக செய்திகள் வெளியானது. இது அஜித்தின் 64வது திரைப்படமாகும். ஒரு கட்டத்தில் ஆதிக்கே அதை உறுதி செய்தார்.ஆனால் இப்படத்தை யார் தயாரிக்கப் போகிறார் என்பது மட்டும் தெரியாமல் இருந்தது. அஜித் கேட்ட சம்பளமும், படத்தின் பட்ஜெட்டும்தான் அதற்கு காரணம்.
தனக்கு சம்பளமாக அஜித் 180 கோடி கேட்க, படத்தின் பட்ஜெட் 300 கோடி என்பதால் எந்த தயாரிப்பாளரும் இப்படத்தை தயாரிக்க முன்வரவில்லை. ஏஜிஎஸ், சன் பிக்சர்ஸ், லலித் குமார் என பல தயாரிப்பாளர்களிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தி நடத்திய அவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை.
அதன்பின் பிரபல வினியோகஸ்தர் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இப்படத்தை தயாரிக்கப் போவதாக செய்திகள் வெளியானது. ஆனால் ஒரு கட்டத்தில் இதை தன்னால் சமாளிக்க முடியாது என பயந்த ராகுல் இந்த படத்தை தயாரிப்பதிலிருந்து விலகி விட்டார் எனவும் செய்திகள் கசிந்தது. அதற்கு காரணம் அஜித் அந்த சம்பளத்தை குறைக்க முன்வரவில்லை.

அஜித் கடந்த பல மாதங்களாகவே கார் ரேஸில் கலந்து கொண்டு வருகிறார். அக்டோபர் முதல் 2026 பிப்ரவரி வரை இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருந்தனர். தற்போது செப்டம்பர் துவங்கிவிட்டதால் ஏகே 64 படம் டேக் ஆப் ஆகுமா? யார் தயாரிப்பாளர்? என்பதில் குழப்பம் நீடித்து வந்தது.
தற்போது சம்பள விஷயத்தில் அஜித் இறங்கி வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. அவர் தன சம்பளத்தில் சில கோடிகளை குறைக்க இந்த படம் டேக் ஆப் ஆகியிருப்பதாக சொல்கிறார்கள். இந்த மாத இறுதியில் அஜித் சென்னை வருகிறார். எனவே அக்டோபர் மாதத்தில் இருந்து இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கும் என்கிறார்கள். இந்த படத்திற்காக சென்னை மற்றும் ஹைதராபாத்தில் பெரிய செட் ஒன்றை அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

