சக்தி திருமகனில் விஜய் ஆண்டனி செய்த சம்பவம்.. மிரண்டு போன கோலிவுட்..
Shakthi thirumagan movie: இசையமைப்பாளராக இருந்து சினிமாவில் நடிக்க துவங்கியவர் விஜய் ஆண்டனி. நான் என்கிற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இவரின் முதல் படமே சூப்பர் ஹிட் அடித்தது. அடுத்து இவர் நடித்த சலீம், பிச்சைக்காரன் ஆகிய படங்களும் வெற்றி பெற்றது. இதில் பிச்சைக்காரன் படம் 100 கோடி வரை வசூல் செய்து விஜய் ஆண்டனியை ஒரு முன்னணி நடிகராக மாற்றியது.
விஜய் ஆண்டனியை பொறுத்தவரை அவர் நடிக்கும் படங்களை அவரே சொந்தமாக தயாரித்தும் வருகிறார். பிச்சைக்காரன் திரைப்படம் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கில் டப் செய்யப்பட்டு ஆந்திராவில் வெளியாகி அங்கும் நல்ல வசூலை பெற்றது. அதிலிருந்து இப்போது வரை விஜய் ஆண்டனியின் எல்லா திரைப்படங்களும் தெலுங்கு மொழியிலும் வெளியாகி வருகிறது.
பிச்சைக்காரன் திரைப்படத்திற்கு பின் விஜய் ஆண்டனி பல படங்களில் நடித்து விட்டார். அதில் பிச்சைக்காரன் 2 சூப்பர் ஹிட் அடித்தது. அதேநேரம் ரோமியோ உள்ளிட்ட சில படங்கள் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக்கவில்லை. தற்போது சக்தி திருமகன் என்கிற திரைப்படத்தில் நடித்திருக்கிறார் விஜய் ஆண்டனி இந்த படம் வருகிற 19ம் தேதி வெளியாக உள்ளது. பொதுவாகவே திரையுலகில் ஃபைனான்சியர்களிடம் பணம் வாங்கிதான் தயாரிப்பாளர்கள் படம் எடுப்பார்கள்.

அப்படி வாங்கிய பணத்தை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் திருப்பிக் கொடுப்பார்கள். படத்தின் ரிலீஸுக்கு முன்பு நடக்கும் வியாபாரத்தின் மூலம் கிடைக்கும் பாதியும், தியேட்டரில் ஓடி அதன் மூலம் கிடைக்கும் வசூலில் மீதி என செட்டில் செய்வார்கள். இதுதான் நடைமுறை.
சக்தி திருமகன் படத்திற்காகவும் விஜய் ஆண்டனி பிரபல சினிமா பைனான்சியர் மதுரை அன்புவிடம் கடன் வாங்கி இருக்கிறார். இதில் ஆச்சரியம் என்னவெனில் பட ரிலீசுக்கு 10 நாள் இருக்கும் நிலையில் எல்லா பணத்தையும் செட்டில் செய்து விட்டாராம். இந்தப் படத்திற்காக வாங்கிய கடன் மட்டும் இல்லை. இதற்கு முன் தனது வீடு கட்டுவதற்காக வாங்கிய சில கோடிகள் என எல்லாவற்றையுமே செட்டில் செய்து விட்டு தற்போது கோலிவுட்டில் கடன் இல்லாத ஒரே தயாரிப்பாளராக விஜய் ஆண்டனி இருக்கிறார். இதை பலரும் ஆச்சரியமாக பேசுகிறார்கள்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

