கேட்டதை கொடுக்கும் 999
நாம் பேசக்கூடிய எந்த ஒரு வார்த்தையாக இருந்தாலும் நாம் செய்யக்கூடிய எந்த ஒரு செயலாக இருந்தாலும் அதை இந்த பிரபஞ்சம் உற்று நோக்குகிறது என்றும் அதன் விளைவால் தான் நமக்கு பலவிதமான நன்மைகளும் தீமைகளும் நடைபெறுகிறது என்றும் கூறப்படுகிறது. பிரபஞ்ச பேராற்றல் என்பது மிகவும் சக்திவாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. தெய்வீக சக்திக்கு இணையாக தான் இந்த பிரபஞ்ச ஆற்றலும் திகழ்கிறது. அப்படிப்பட்ட பிரபஞ்ச ஆற்றல் அதிகமாக இருக்கக்கூடிய நாளில் நாம் செய்யக்கூடிய வேண்டுதல்களும் வழிபாடுகளும் நமக்கு விரைவிலேயே பலனைத் தரும்.
அந்த வகையில் பிரபஞ்ச பேராற்றல் மிகுந்த நாளாக தான் செப்டம்பர் மாதம் ஒன்பதாம் தேதி திகழ்கிறது. இதன் அமைப்பு 999 என்று வருகிறது. ஒன்பதாம் மாதம் ஒன்பதாம் தேதி 2025 ஆம் வருடத்தின் கூட்டுத்தொகையாக 9 என்று மூன்று ஒன்பதுகளும் ஒன்றாக சேர்ந்து வரும்பொழுது பிரபஞ்ச பேராற்றல் என்பது மிகவும் அதிகமாகவே இருக்கும். அப்படிப்பட்ட நாளில் நாம் செய்ய வேண்டிய ஒரு எளிமையான வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கேட்டதை கொடுக்கும் 999
இந்த வழிபாட்டை செப்டம்பர் மாதம் ஒன்பதாம் தேதி காலை 5 மணியிலிருந்து இரவு 12 மணிக்குள் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். அதீத சக்தி வாய்ந்த நேரம் என்றால் காலை 9 மணியிலிருந்து 9:59 மணி வரைக்கும் அதே போல் இரவு 9:00 மணியிலிருந்து 9:59 மணி வரைக்கும் இருக்கக்கூடிய காலத்தில் நாம் செய்யும் பொழுது இன்னும் அதீத சக்தி நமக்கு கிடைக்கும் என்றே கூறப்படுகிறது. இந்த நாளின் கூடுதல் சிறப்பு என்னவென்றால் இது செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை என்பது செவ்வாய் பகவானுக்குரிய கிழமை. செவ்வாய் பகவானுக்குரிய எண்ணாக ஒன்பது திகழ்கிறது. அதனால் செவ்வாய் பகவானுக்குரிய கிழமையில் 999 என்ற செயற்கை வருவது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த நாளில் நாம் முருகப்பெருமானை வழிபாடு செய்துவிட்டு பின்வரும் இந்த ஒரு மந்திரத்தை 9 முறை மட்டும் எழுதினால் போதும். ஒரு வெள்ளை நிற பேப்பரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் செவ்வாய் பகவானுக்குரிய நிறமான சிவப்பு நிற பேனாவை பயன்படுத்தி இந்த மந்திரத்தை எழுத வேண்டும். இந்த மந்திரத்தை எழுதுவதற்கு முன்பாக நமக்கு என்ன வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று நினைக்கிறோமோ அந்த வேண்டுதலை மனதார நினைத்து விரைவில் நிறைவேற வேண்டும் என்று வேண்டிக்கொண்டு மந்திரத்தை 9 முறை எழுத வேண்டும்.
ஒன்பது முறை எழுதி முடித்த பிறகு அந்த பேப்பரை மடித்து பூஜை அறையிலோ அல்லது பணம் வைக்கும் இடத்திலோ வைத்து விடுங்கள். வைத்துவிட்டு திரும்பவும் நாம் எந்த வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று நினைத்தோமோ அந்த வேண்டுதல் நிறைவேறி விட்டதாகவே கற்பனை செய்து மனமகிழ்ந்து இறைவனுக்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றியை தெரிவிக்க வேண்டும். எப்பொழுது நீங்கள் முன்வைத்த வேண்டுதல் நிறைவேறுகிறதோ அப்பொழுதே அந்த பேப்பரை எடுத்து கற்பூரத்தை பயன்படுத்தி எரித்து கால்படாத இடத்தில் போட்டு விட வேண்டும்.
மந்திரம்
” 999 அபிலாஷை ததாஸ்து “
இதையும் படிக்கலாமே: குழந்தைகளின் மந்த புத்தியை மாற்றும் திருச்செந்தூர் முருகன்
பிரபஞ்ச பேராற்றல் மிகுந்த 999 நாளில் 9 முறை இந்த மந்திரத்தை முழு மனதோடு எழுதி வேண்டுதலை முன்வைப்பவர்களுக்கு அந்த வேண்டுதல் விரைவில் நிறைவேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.
The post கேட்டதை கொடுக்கும் 999 appeared first on Dheivegam.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.