Madhampatty Rangaraj: குழந்தைக்காக நியாயம் கேட்கும் ஜாய் கிறிஸில்டா… முதல் குழந்தையை விட்டது ஏன்?

Madhampatty Rangaraj: பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளியின் நடுவர் மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் கொடுத்த சர்ச்சை தற்போது வைரலாக பேசப்பட்டு வரும் நிலையில் ஒரு அதிர்ச்சி சம்பவமும் தற்போது வெளிவந்திருக்கிறது.

மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தவர் மாதம்பட்டி ரங்கராஜ். அப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றாலும் தொடர்ந்து நடிப்பில் ஆர்வம் செலுத்தாமல் தன்னுடைய குடும்பத்தொழிலான கேட்டரிங் கையில் எடுத்து பிரபலமாக செயல்பட்டு வந்தார்.

இதன் காரணமாக அரசியல் களத்திலும், பிரபலங்களின் வீட்டு விசேஷங்களிலும் இவருடைய சமையல் தான் அதிகமாக பேசப்பட்டு வந்தது. இந்த புகழால் இவருக்கு விஜய் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான குக் வித் கோமாளியின் நடுவராக வாய்ப்பு கிடைத்தது.

Madhampatty Rangaraj
Madhampatty Rangaraj

தற்போது இரண்டு சீசன்களாக மாதம்பட்டி ரங்கராஜ் இந்த நிகழ்ச்சியில் இருந்து வருகிறார். இவருக்கு ஸ்ருதி என்ற மனைவி இருந்த நிலையில் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிஸில்டா நான் தான் மாதம்பட்டியின் மனைவி என திடீரென அறிவிப்பை வெளியிட்டார்.

ஆனால் இது குறித்து மாதம்பட்டி தரப்பு எந்தவித விளக்கமும் அளிக்காமல் இருந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பாக கமிஷனர் அலுவலகத்தில் தன்னை அவர் ஏமாற்றி விட்டதாக தான் இப்போது ஏழு மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் ஜாய் தரப்பு கொடுத்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் மாதம்பட்டி தன்னுடைய முதல் மனைவியுடன் பொது இடங்களில் மீண்டும் பங்கேற்று வருவது மேலும் சிக்கலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஜாய் தன்னுடைய பிரச்சினையை முதல்முறையாக பேட்டி மூலம் தொடர்ந்து பேசி வரும் நிலையில் அதுவும் தற்போது வைரலாக பரவி வருகிறது. கடந்த இரண்டு வருடமாக நான் அவருடன் மனைவியாக வாழ்ந்து வருகிறேன். தற்போது என் குழந்தைக்கு அவர் பதில் சொல்லியாக வேண்டும் என தீர்க்கமாக பேசும் ஜாய் கிறிஸில்டா ஏற்கனவே பொன்மகள் வந்தாள் இயக்குனர் ஃபெட்ரிக்கை முதல் திருமணம் செய்தவர். இவர்களுக்கு ஒரு குழந்தை இருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

இருவருக்கும் முறையாக விவாகரத்து நடந்த நிலையில் முதல் குழந்தையை ஜாய் பராமரிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் ஜாய் மாதம்பட்டி ரங்கராஜுடன் தொடர்பு ஏற்பட்ட பின்னரே ஃபெட்ரிக்கை பிரிந்தார் என்றும் தகவல் கசிந்து வருகிறது. இவ்வளவு பிரச்னை நடக்கும் நிலையில் மாதம்பட்டி இதுவரை வாய்திறக்கவில்லை என்பதும் பலருக்கு அவர் மீது கடுப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.