மதராஸியால் மண்ணை கவ்விய காந்தி கண்ணாடி,பேட் கேர்ள்!.. 4 நாள் வசூல் இவ்வளவுதானா?!..

Gandhi Kannadi: எப்போதுமே எதிர்பார்ப்புள்ள ஒரு பெரிய நடிகரின் படத்தோடு வெளியாகும் சின்ன பட்ஜெட் படங்கள் அல்லது சிறிய நடிகர்களின் படங்கள் பெரிய அளவில் வசூலை பெறாது. ஆனால் சில சமயம் அது உல்டாவாகவும் நடக்கும். பெரிய நடிகரின் படத்தை விட நல்ல கதை அம்சம் கொண்ட சின்ன பட்ஜெட் படம் அல்லது சின்ன நடிகரின் படம் நல்ல வசூலை பெறும். சூர்யாவின் ரெட்ரோ படம் வெளியான போது அந்த படத்தோடு வெளியான டூரிஸ்ட் பேமிலி படம் ரெட்ரோவை விட அதிகமான வசூலை செய்ததாக சொல்லப்பட்டது.

பெரும்பாலும் ரஜினி, விஜய், அஜித், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது சின்ன பட்ஜெட் படங்கள் வெளியாகாது. ரிலீஸ் தேதியை தள்ளி வைத்து விடுவார்கள். ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி படத்தோடு வெற்றிமாறன் தயாரிப்பில் புதுமுக நடிகை நடித்த பேட் கேர்ள் படமும், விஜய் டிவி மூலம் பிரபலமான பாலா முக்கிய இடத்தில் நடித்த காந்தி கண்ணாடி படமும் வெளியானது.

gandhi
#image_title

பேட் கேர்ள் படத்தை அதிகமான சிரமங்களுக்கு இடையே வெளியிட்டார் வெற்றிமாறன். ஏனெனில் சென்சாரில் சிக்கி, நீதிமன்றம் சென்று நீதிபதி பார்த்து சில காட்சிகளை நீக்கி, சில வசனங்களை நீக்கி இப்படத்தை வெளியிட்டார்கள் இந்த படத்தோடு இனி படம் தயாரிப்பதை நிறுத்தி விடப் போகிறேன் என வெற்றிமாறன் வேதனையோடு கூறினார். அப்படி வெளியான பேட் கேர்ள் திரைப்படம் கடந்த வாரம் வெறும் 32 லட்சத்தை மட்டுமே வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

பாலாவும், பாலாஜி சக்திவேலும் முக்கிய வேடத்தில் நடித்து வெளியான காந்தி கண்ணாடி படம் முதல் வாரத்தில் 1.45 கோடி மட்டுமே வசூல் செய்திருக்கிறது. எல்லாருடைய கவனமும் மதராஸி படத்தில் இருப்பதாலும், பேட் கேர்ள் மற்றும் காந்தி கண்ணாடி படங்களில் பெரிய நடிகர்கள் நடிக்கவில்லை என்பதோடு டூரிஸ்ட் ஃபேமிலி அளவுக்கு வரவேற்பை பெறவில்லை என்பதால் இந்த படங்கள் வசூலை பெறவில்லை.

#image_title

மதராஸி படத்திற்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் என் படம் பார்க்க வாருங்கள் என பாலா கோரிக்கை வைத்திருந்தார். ஆனாலும் வசூல் கிடைக்கவில்லை. இத்தனைக்கும் இந்த படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களும் வந்தது. தற்போது மதராஸி படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வருவதோடு வசூலும் குறைந்துவிட்டது. எனவே காந்தி கண்ணாடிக்கு பாசிட்டிவான விமர்சனங்கள் அதிகரித்தால் இந்த வாரம் காந்தி கண்ணாடி படத்தின் வசூல் அதிகரிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் வெற்றிமாறன் தயாரிப்பில் வெளிவந்த பேட் கேர்ள் படம் இதற்கு மேல் வசூலை பெற வாய்ப்பே இல்லை என்கிறார்கள். மொத்தத்தில் பேட் கேர்ள் திரைப்படம் வெற்றிமாறனுக்கு நஷ்டத்தை கொடுத்திருக்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.