Madharasi Movie: எல்லாமே துட்டு அரசியல்தான்! சிவகார்த்திகேயனின் மாஸ்டர் ப்ளான்.. ‘மதராஸி’க்கு கை கொடுத்ததா?

Madharasi Movie: அமரன் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் மதராஸி. இந்த படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்க அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். அமரன் திரைப்படம் கொடுத்த மிகப்பெரிய வெற்றி சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டை பெரிய அளவில் உயர்த்தியது. அதனைத் தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி திரைப்படத்திலும் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி திரைப்படத்திலும் நடித்து வந்தார். இந்த நிலையில்தான் மதராஸி திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

அதுவும் முருகதாஸ் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த படம் வெளியாவதால் ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. முருகதாஸுக்கு இந்த படம் ஒரு கம்பேக்காக இருக்குமா என்றும் எதிர்பார்க்கப்பட்டது. காதல் கலந்த ஒரு ஆக்சன் படமாக இந்த படம் உருவானது. படத்தின் டிரைலர் வெளியானதில் இருந்து படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரிய எதிர்பார்ப்பும் இருந்து வந்தது. துப்பாக்கி மாதிரியான படமாக இருக்குமா என்றும் அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய் அஜித் சூர்யா இவர்களுக்கு அவர்களுடைய டாப் 10 படங்களை எடுத்து பார்த்தோம் என்றால் அது முருகதாஸின் படமும் ஒன்றாக இருக்கும்.

அந்த வரிசையில் சிவகார்த்திகேயனுக்கும் இந்த படம் அமையுமா? என்றும் அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில் ஆரம்பத்திலிருந்து படத்திற்கு ஒரு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் தான் எழுந்து வருகின்றன. ஆனால் இதைப் பற்றி வலைப்பேச்சு அந்தணன் ஒரு பேட்டியில் கூறும் பொழுது இங்கு துட்டு அரசியல் தான் விளையாடி இருக்கின்றன என்று தெரிவித்திருக்கிறார். ஏனெனில் ஆரம்பத்திலிருந்து வலைப்பேச்சு அந்தணன் இந்த படத்திற்கு கலவையான விமர்சனத்தை தான் கொடுத்து வந்தார். ஆனால் சமூக வலைதளங்களில் மதராஸி திரைப்படத்திற்கு ஒரு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்து கொண்டிருப்பதனால் இதைப் பற்றி ஒரு பேட்டியில் அவர் முழுமையாக பேசியிருக்கிறார்.

அதாவது சிவகார்த்திகேயனுக்கு என இங்கு ஒரு தனி கூட்டமே இருக்கின்றனர். யாரெல்லாம் இந்த சோசியல் மீடியாக்களில் நல்லாவே இயங்கிக் கொண்டிருக்கிறார்களோ அவர்களை தனித்தனியாக சந்தித்து கவனிக்க வேண்டியதை கவனித்திருக்கிறார்கள். அதனுடைய விளைவு தான் இந்த படத்தை ஒரு நடுநிலையாக விமர்சனம் செய்ய வேண்டும் என்று எண்ணம் இல்லாமல் பல பேர் அவரை அடுத்த விஜய் ஆகிவிட்டார், பிரமாதமான படம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு வருகின்றனர்.

anthanan

வேற வழி இல்லை. சினிமாவில் பலபேர் வளர்ந்தது இப்படித்தான். ஒரு வகையில் சொல்லுவார்கள் அல்லது சொல்ல வைப்பார்கள். இதில் சிவகார்த்திகேயன் இரண்டாவது ரகமாகத்தான் இருக்கிறார் .இந்த படத்தை பொருத்தவரைக்கும் சிவகார்த்திகேயன் தரப்பிலிருந்து இப்படி சொல்ல வைத்திருக்கிறார்கள். இந்த படத்தை பொருத்தவரைக்கும் ஒரு பாதி விமர்சனங்கள் சிவகார்த்திகேயன் மீது நமக்கு இருக்கிறது. அதை பேலன்ஸ் செய்கிற மாதிரி ஏற்கனவே முடிவு செய்து நாளைக்கு இப்படித்தான் விமர்சனங்கள் வரப்போகிறது. அதனால் முன்கூட்டியே நாம் தயாராகி விடுவோம் என நினைத்து இந்தப் படை பரிவாரங்களை எல்லாம் கூட்டி அதை சரி செய்து வைத்திருக்கிறார் என அந்த பேட்டியில் கூறி இருக்கிறார் அந்தணன்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.