மதராஸி பட ரசிகர்களுக்கு அடுத்த ட்ரீட்!.. தங்கப்பூவே பாடல் வீடியோ ரிலீஸ்!..

Madharaasi: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து கடந்த வெள்ளிக்கிழமை வெளியான திரைப்படம் மதராஸி. அமரன் ஹிட்டுக்கு பின் சிவகார்த்திகேயனின் அடுத்த படமாக மதரஸி வெளியாகியிருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடித்திருக்கிறார்.
துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்த வித்யுத் ஜம்வால் இந்த படத்திலும் வில்லனாக அசத்தியிருக்கிறார்.

அவரும் சிவகார்த்திகேயனும் மோதும் சண்டை காட்சிகள் அசத்தலாக இருப்பதாக ரசிகர்கள் சொல்லுகிறார்கள். மொத்தமாகவே மதராஸி படத்தில் இடம்பெற்றுள்ள ஆக்சன் காட்சிகள் அசத்தலாக இருப்பதாக பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். கஜினி சூர்யா போல சிவகார்த்திகேயனுக்கு வித்தியாசமான கதாபாத்திரம் அமைந்திருக்கிறது.

சர்கார் திரைப்படத்திற்கு பின் முருகதாஸுக்கு வெற்றி படம் எதுவும் அமையவில்லை. ரஜினியை வைத்து அவர் இயக்கிய தர்பார் படமும் ஓடவில்லை. எனவே கடந்த நான்கு வருடங்களாக அவர் எந்த படத்தையும் இயக்கவில்லை. இந்நிலையில்தான் சிவகார்த்திகேயனோடு கைகோர்த்து ஒரு ஆக்சன் திரில்லர் படத்தை உருவாக்கி இருக்கிறார். ஆக்சன் மட்டும் இல்லாமல் இந்த படத்தில் கவிதை போன்ற காதல் காட்சிகளும் இடம் பெற்றிருக்கிறது. இதுவும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

படத்தைப் பார்த்த பலரும் முருகதாஸுக்கு இது ஒரு நல்ல கம்பேக் படம் என சமூக வலைதளங்களில் கூறி வருகிறார்கள். அவரும் அவர்களுக்கு நன்றி கூறி வருகிறார். பெரிய அளவில் இல்லை என்றாலும் மதராசி படம் நல்ல வசூலை பெற்று வருகிறது இந்நிலையில் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ‘தங்கப்பூவே’ என்கிற பாடல் வீடியோவை பட குழு தற்போது வெளியிட்டிருக்கிறது. இந்த படத்திற்கு இசை அனிருத் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.