நா.முத்துக்குமாரை வைத்து பல லட்சம் சுருட்ட பார்த்த ஆர்.கே.செல்வமணி?.. கையும் களவுமாக சிக்கிய சம்பவம்..
இந்திய சினிமாக்களில் தவிர்க்க முடியாத ஒன்று பாடல்கள். அப்படி தமிழில் வெறும் பாடல்களுக்காகவே ஹிட்டான படங்கள் ஏராளம். அப்படி தனது தனித்துவமான பாடல்களால் இளைஞர்களை கவரக்கூடியவர் நா.முத்துக்குமார் இவர் எழுதும் பாடல்கள் எளிமையாகவும் அதே சமயம் ஆழமான கருத்துக்களையும் பிரதிபலிக்கும்.

எவ்வளவு பெரிய சூழ்நிலையாக இருந்தாலும் அந்த உணர்வுகளை வெளிப்படுத்த மிக எளிய தமிழ் சொற்களில் பாடல்களை எழுதுவார். 2001 ஆம் ஆண்டு ”வீர நடை” என்ற திரைப்படத்தின் மூலம் சீமான் இந்த ”முத்தை” தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார். அதற்கு முன் இயக்குனர் பாலு மகேந்திரா உடன் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தார். அங்கு இன்று முன்னணி இயக்குனராக இருக்கும் வெற்றிமாறன் மற்றும் ராம் ஆகியோருடன் அழகான நட்பு உருவானது.
ஒவ்வொரு இசையமைப்பாளருக்கும் ஒவ்வொரு பாடலாசிரியர் காம்போ மிக அழகாக செட்டாகும். அந்த வகையில் யுவன் சங்கர் ராஜா மற்றும் நா.முத்துக்குமாரின் காம்போ என்றும் எவர்கிரீன் தான். ’நந்தா’ திரைப்படத்தின் மூலம் இவர்களது காம்பினேஷன் உருவானது. அன்று முதல் கடைசியாக ராமின் இயக்கத்தில் உருவான ’தரமணி’ படம் வரை இவர்களின் காம்போ பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதுவரை நா.முத்துக்குமார் 1500 பாடல்களை எழுதியிருக்கிறார். அடுத்த வாலி, அடுத்த வைரமுத்து என்று தமிழ் சினிமாவில் வருவார் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் 2016 ஆம் ஆண்டு எதிர்பாராதவிதமாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை எதுவும் பலனளிக்காததால் தனது 41 வயதில் மரணம் அடைந்தார். அவரது இழப்பை இன்னும் தமிழ் திரையுலகம் ஏற்க மறுக்கிறது. இன்று வரை அவரின் இடத்தை நிரப்ப எந்த பாடல் ஆசிரியராலும் முடியவில்லை. இந்நிலையில் நா.முத்துக்குமாரின் பெயரை பயன்படுத்தி அதன் மூலம் பல லட்ச ரூபாய் சுருட்ட நினைத்ததாக மூத்த பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு பிஸ்மி கூறி இருக்கிறார் மேலும் அதில்,” சமீபத்தில் நா.முத்துக்குமாரை பாராட்டும் விதத்தில் ஒரு விழா எடுக்கப்பட்டது. அதில் கூறிய ஆர்.கே.செல்வமணி,’ நாங்கள் இதே மாதிரி ஒரு விழாவை ஏற்கனவே எடுக்க திட்டம் போட்டோம். ஆனால் முத்துக்குமாரின் சகோதரர் ரமேஷ் குமார் அதற்குப் பெரிய தடையாக இருந்து கெடுத்துவிட்டார்’. என்று சொன்னார்”.

”ஆனால் நான் இது குறித்து அவரின் தம்பியிடம் கேட்டபோது ஆர்.கே.செல்வமணி இவ்வாறு என்னிடம் சொன்னது உண்மைதான். ஆனால் எப்படி கேட்டார் என்றால்,’ உங்கள் அண்ணன் முத்துக்குமாரின் பெயரை வைத்து நிகழ்ச்சி நடத்துகிறோம். அதில் கிடைக்கும் பணத்தை எங்களுடைய இயக்குனர் சங்கத்திற்கு எடுத்துக் கொள்வோம். உங்கள் குடும்பத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகை மட்டும் கொடுப்போம்’ என்று கூறினாராம்”.
”அதற்கு முத்துக்குமாரின் தம்பி கடைசி வரை ஒத்துக்கவே இல்லை. ஆனால் ஆர்கே செல்வமணி முக்கியமான விஷயத்தை கட் பண்ணி விட்டு விழா நடத்த தம்பி தடையாக இருந்தார் என்று உருட்டு உருட்டி இருக்கிறார். இந்த விஷயத்தை முத்துக்குமாரின் தம்பி என்னிடம் பகிர்ந்து கொண்டார். என்று ஆர்.கே.செல்வமணி இதுவரை யாரும் பார்க்காத முகத்தை அம்பலப்படுத்தியுள்ளார் வலைப்பேச்சு பிஸ்மி
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

