SK Dhanush:தனுஷுக்கு அவார்டு உறுதி! போற போக்குல கொளுத்தி விட்டு போயிட்டாரே SK

SK Dhanush: தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படும் நடிகராக மாறி இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். அதற்கு ஒரே காரணம் அமரன் கொடுத்த மிகப்பெரிய வெற்றி. அந்தப் படத்திற்கு பிறகு அவருடைய மார்க்கெட் பெரிய அளவில் உயர்ந்தது. அதனைத் தொடர்ந்து கோட் திரைப்படத்தில் விஜய் கையால் சிவகார்த்திகேயன் துப்பாக்கியை பெற்றுக் கொண்டதும் பெரும் பேசும் பொருளாக பார்க்கப்பட்டது .அதிலிருந்து அடுத்த தளபதி சிவகார்த்திகேயன் தான் என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவ ஆரம்பித்தன.

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் அவருடைய நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் மதராசி திரைப்படமும் அவருக்கு பெரிய அளவில் வரவேற்பை பெற்று தந்திருக்கின்றன. ஆரம்பத்தில் இருந்தே அந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் அதனுடைய வசூல் எதிர்பார்த்த அளவு வந்திருக்கிறது. இன்னும் அடுத்தடுத்த நாட்களில் அதனுடைய வசூல் அதிகரிக்கும் என்றே சொல்லலாம். இந்த நிலையில் துபாயில் சைமா விருது வழங்கும் விழா நடைபெற்றது.

அந்த விழாவிற்கு திரையுலகை சார்ந்த அனைவரும் கலந்து கொண்டனர். மற்ற விழாக்களை காட்டிலும் சைமா விருது வழங்கும் விழாவிற்கு எங்கு இருந்தாலும் நடிகர்கள் ஒன்று கூடி விடுவார்கள். எப்படி கேன்ஸ் திரைப்பட விழா, ஆஸ்கார் விருது வழங்கும் விழா போன்றவைகள் சிறப்பாக கருதப்படுகின்றனவோ அதேபோல சைமா விருது விழாவும் திரையுலகினர் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இங்கு நடிகர் நடிகைகள் ஆடம்பரமாக வந்து கலந்து கொள்வது வழக்கம்.

அந்த வகையில் இந்த வருடம் நடைபெற்ற விழாவில் அனைத்து முன்னணி நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர். அதில் அமரன் திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது சிவகார்த்திகேயனுக்கு வழங்கப்பட்டது. விருதைப் பெற்றுக் கொண்ட சிவகார்த்திகேயன் மேடையில் பேசும் பொழுது இந்த விருதுக்கு காரணமானவர் ராஜ்குமார் பெரியசாமி தான். அவரால்தான் இங்கு எல்லோருக்குமே விருது கிடைத்துள்ளது. அது மட்டுமல்ல இனிமேல் அவர் எடுக்கப் போகும் அடுத்த திரைப்படத்திற்கும் நிறைய விருதுகள் அவரால் கிடைக்கும் என சிவகார்த்திகேயன் கூறியிருக்கிறார்.

ராஜ்குமார் பெரியசாமி அடுத்ததாக தனுஷை வைத்து தனுஷின் 55 வது படத்தை இயக்க இருக்கிறார். தற்போது தனுஷ் வேறு வேறு படங்களில் பிஸியாக இருப்பதால் இந்த வருட இறுதியில் ராஜ்குமார் பெரியசாமி தனுஷ் படத்தின் படப்பிடிப்பு துவங்கும். சிவகார்த்திகேயனை பொறுத்த வரைக்கும் மற்ற நடிகர்களை புகழ்ந்து பேசியே தன்னுடைய கைத்தட்டல்களை அசால்ட்டாக தட்டி சென்று விடுவார்,

அப்படித்தான் சைமா விருது வழங்கும் விழாவிலும் தனுஷ் ராஜ்குமார் பெரியசாமி இணையும் படத்திற்கு கண்டிப்பாக விருது கிடைக்கும் என மறைமுகமாக சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். ஒரு வேளை தனுஷுக்கு அந்தப் படத்திற்காக விருது கிடைத்துவிட்டால் ஹேஸ் டேக்கில் அன்றே சொன்னார் சிவகார்த்திகேயன் என்று செய்திகள் வந்துவிடும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.