கமல் ஓகே சொன்னாலும் சிக்கலில் மாட்டிய ரஜினி.. டேக் ஆஃப் ஆகுமா ரஜினி-கமல் காம்போ?

கோலிவுட் சினிமாவின் தனி அடையாளமாக விளங்குபவர்கள் ரஜினி மற்றும் கமல். ஒரே இண்டஸ்ட்ரீயில் பயணித்தாலும் தங்களுக்கென்று தனித்தனி பாணியில் நடித்து ரசிகர்களை தன் வசமாக்கினார்கள். ரஜினி ஸ்டைல், பஞ்ச் டயலாக் என்று தனக்கென ஒரு வட்டத்தை உருவாக்கி அதன் மூலம் ரசிகர்களை சேர்க்க ஆரம்பித்தார். மற்றொருபுறம் கமல் தன் உடலை வருத்தி படத்திற்கு படம் வித்தியாசமான நடிப்பை கொண்டு வருவார்.

திரையுலையில் நவீன காலத்தில் என்ன தொழில்நுட்பம் பயன்படுத்துகிறார்கள் என ஆராய்ந்து அதனை கற்றுக்கொண்டு தன்னை புதுப்பித்துக் கொண்டே இருப்பார். சினிமாவின் அறிவு கடல் கமல்ஹாசன். இன்றும் வளர்ந்து வரும் இளம் இயக்குனர்களுக்கும், நடிகர்களுக்கும் கமல்ஹாசன் மற்றும் ரஜினி முன்னுதாரணமாக இருந்து வருகிறார்கள். 80-களில் இவர்கள் வளர்ந்து வரும் சமயத்தில் ஒன்றாக பல படங்களில் நடித்துள்ளனர்.

#image_title

அதன் பிறகு தங்களுக்கான தனித்தனி பாதையை உருவாக்கி பயணிக்க தொடங்கி விட்டார்கள். இவர்கள் இருவரும் ஒன்றாக நடித்து சுமார் 46 வருடங்கள் உருண்டோடி விட்டது. இந்நிலையில் சமீபத்தில் சைமா விருது வழங்கும் விழாவில் மீண்டும் ரஜினி-கமல் காம்போ நடக்க இருப்பதாக கமல்ஹாசனே அறிவித்துள்ளார். ஏற்கனவே இதன் வதந்தி சமூக வலைதளங்களில் பரவி வந்தது அதில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி மற்றும் கமல் இணைந்து நடிக்க உள்ளதாக பரவி வந்ததை தற்போது கமல்ஹாசன் அதை உறுதி செய்துள்ளார்.

இதைப் பற்றி கமல் வெளியே சொன்னாலும் ரஜினி இன்னும் மௌனம் காத்துக் கொண்டு வருகிறார். அதற்கான காரணத்தை வலைப்பேச்சுபிஸ்மி கூறுகையில்.. ”இந்த தகவலை நாங்கள் ஆறு மாதத்திற்கு முன்பே சொல்லி விட்டோம். அதன் பிறகு பரவலாக பரவத் தொடங்கியது. கூலி படத்திற்கு பிறகு அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். ரஜினியும் ஜெயிலர்-2 படத்தை முடித்துவிட்டு தனது பயோபிக்கிற்காக ஒரு ஆறு மாதம் இடைவேளை எடுத்துக் கொள்கிறார்”.

#image_title

”இது எல்லாம் முடிந்த பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதற்குப் பின்னர் ரஜினி உடைய சாணக்கியத்தனம் அடங்கியுள்ளது. இந்த படத்தை ராஜ்கமல் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் இணைந்து தயாரிக்க உள்ளனர். ரெட் ஜெயன்ட் என்பது திமுக கம்பெனி. அடுத்து தேர்தல் வரப்போகிறது. இதில் திமுக தோல்வியுற்றது என்றால் ரஜினி ரெட் ஜெயின்ட்டுக்கு படம் பண்ணுவாரா? கண்டிப்பா பண்ண மாட்டார்”.

”அதில் ஒரு சிக்கல் இருக்கிறது. அதே சமயம் திமுக ஆட்சிக்கு வந்து விட்டால் படத்தில் நடிக்கலாம். அதனால் அடுத்து வரக்கூடிய தேர்தல் வரை இந்த ப்ராஜெக்டை நிறுத்தி வைக்கலாம். என என்ன ரஜினி முடிவெடுத்துள்ளார். இதில் கமல்ஹாசனுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் ரஜினி அப்படி இல்லை அவர் எல்லாருக்கும் நல்லவனாக இருக்கணும் அப்படின்னு நினைப்பாரு. அதிமுக ஆட்சி வந்தால் திமுக கம்பெனியில் நடிப்பது அவர்கள் விரும்ப மாட்டார்கள். அதனால் ரஜினி காலம் தாழ்த்த முடிவு செய்துவிட்டார். இது ஆரம்பிக்கும் பட்சத்தில் தமிழ் சினிமாவே திரும்பி பார்க்கும் அளவிற்கு மிகப்பெரிய படமாக வரக்கூடும்”. என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.