எனக்கும் பிறக்காத என் குழந்தைக்கும் நீதி வேண்டும்!.. மாதம்பட்டியை கைது செய்ய கதறி அழுத ஜாய்
குக் வித் கோமாளி புகழ் மாதம்பட்டி ரங்கராஜ் மனைவி இருக்கும் போதே விவாகரத்து கூட வாங்காமல் இன்னொரு திருமணம் செய்திருந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. நடிகராக மெஹந்தி சர்க்கஸ் திரைப்படம் மூலம் மக்களால் அறியப்பட்டாலும் தனது சமையல்கலை மூலம் குக் வித் கோமாளி நடுவராக செயல்பட்டு வெகுஜன மக்களை சென்றடைந்தார் மாதம்பட்டி ரங்கராஜ். இந்த நிலையில் அன்மையில் இவர் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் என்பவரை திருமணம் செய்தார்.

இவர்கள் ஜோடியாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் எல்லாம் இணையதளத்தில் வைராகி வருந்தது. முதல் மனைவி ஸ்ருதியை திருமணம் செய்த ரங்கராஜிற்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் ரங்கராஜுக்கு ஜாய்யுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் எளிய முறையில் நெருங்கிய உறவினர்களை மட்டும் கொண்டு கோயிலில் ஜாய் மற்றும் ரங்கராஜின் திருமணம் செய்தார்.
மேலும் ஜாய் தனது ட்விட்டர் பக்கத்தில், ”தற்போது தான் ஆறு மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும்” பதிவிட்டிருந்தார். இந்நிலையில் இரண்டாவது மனைவி ஜாய் கிரிசில்டா சில நாட்களுக்கு முன்பு மாதம்பட்டி ரங்கராஜ் மீது தன்னை ஏமாற்றி விட்டதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் அவர் மீது எடுக்கப்படவில்லை. நாட்டின் பிரதமர் முதல் சிஎம் வரை அனைத்து பிரபலங்களின் வீட்டிலும் ரங்கராஜ் சமையல் செய்து கொடுத்திருப்பதால் இவர் மீது தற்போது ஆக்சன் எடுக்க தயங்குகிறார்கள். இந்நிலையில் மிகுந்த மன வலியுடன் ஜாய் க்ரிஸல்டா பகிர்ந்துள்ளார் அதில்
”சென்னை நகர ஆணையரிடம் நான் புகார் அளித்து 10 நாட்கள் ஆகிறது. பிரபல சமையல்காரரும் நடிகருமான திரு. மாதம்பட்டி ரங்கராஜ் என்னை ஏமாற்றி திருமணம் செய்து கர்ப்பம் தரித்தார். இப்போது நான் ஏழு மாத கர்ப்பிணியாக இருக்கிறேன். இந்த கர்ப்பம் முதிர்ந்த கட்டத்தை தாண்டிய போதிலும், நான் என் பார்வையற்ற தாயுடன் கமிஷனர் அலுவலகத்திற்கு நேரில் சென்றேன். எனது புகாரின் நிலை என்னவென்று எனக்குத் தெரியவில்லை. இதற்கிடையில், திரு. மாதம்பட்டி ரங்கராஜுக்கு விஐபி தரத்தில் மதிப்பு அளிக்கப்படுகிறது, மேலும் அவர் எனக்கு எதிராக அநாகரீகமான, ஆபாசமான சமூக ஊடகங்களில் ஐடி விங்கை வைத்து செயல்படுகிறார்”.
” #அப்பா, உங்கள் அரசாங்கத்தை என்னைப் போன்ற துரதிர்ஷ்டவசமான பெண்கள் நம்புகிறார்கள். நீங்கள் தலையிட்டு நீதி வழங்குமாறு நான் உங்களிடம் கைகூப்பி மன்றாடுகிறேன். எந்தவொரு விஐபியும் ஒரு பிரபலமும் பெண்களுக்கு எதிராக இதுபோன்ற குற்றத்தைச் செய்து, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சுற்றித் திரிய முடியுமா? என் பிறக்காத குழந்தைக்கும் எனக்கும் நீதி வேண்டும்”. என்று எக்ஸ் வலைதளத்தில் வருத்தத்தோடு பதிவிட்டார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

