சிவகார்த்திகேயனுக்காக யுவனை கழட்டிவிட்ட வெங்கட் பிரபு.. ஏக்கத்தில் ரசிகர்கள்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் மதராஸி திரைப்படம் வெளியான முதல் நாளிலிருந்து படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. இதன் மூலம் தமிழ் சினிமாவின் ஆக்சன் ஹீரோவாக உருவெடுத்து இருக்கிறார். சிவகார்த்திகேயன்.
இந்நிலையில் சுதா கொங்காரா இயக்கத்தில் தற்பொழுது சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்நிலையில் சிவா அடுத்ததாக வெங்கட் பிரபுவுடன் கூட்டணி போட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்பொழுது அதில் அனிருத் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அனிருத் சிவகார்த்திகேயன் காம்போவில் கிட்டத்தட்ட எட்டு படங்கள் இதுவரை வந்துள்ளது. இருந்த போதிலும் சிவகார்த்திகேயனுக்கு ஒரு படம் விட்டு ஒரு படம் அனிருத் இசையமைக்கிறார். வெங்கட் பிரபு தனது முதல் படத்திலிருந்து கடைசி படமான விஜயின் கோட் படம் வரை யுவன்தான் இசையமைத்து கொண்டிருந்தார். இதில் கோட் படத்தின் இசை பல விமர்சனங்கள் சந்தித்தது.

அதிலும் ”பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா” பாடலின் பிஜிஎம் முதலில் ஒரு வெர்ஷனும் படத்தில் ஒரு வெர்ஷனும் இருந்தது.. இதற்கு காரணம் முதலில் வந்த பாடலின் பிஜிஎம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை பல விமர்சனங்களை சந்தித்தது. அந்த அழுத்தத்தின் காரணமாக யுவன் சங்கர் ராஜா பீட்டை மாற்றினார். அதுமட்டுமில்ல படத்தின் பிஜிஎம் கூட ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறிவிட்டது.
தற்போது லைம் லெட்டில் இருந்து வருபவர் அனிருத். யுவன் சங்கர் ராஜா பீல்ட் அவுட் ஆகிவிட்டார். இனி அவரிடம் சரக்கில்லை என்று சிவகார்த்திகேயன் அனிருதை போட சொல்லி இருக்கலாம் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இருந்த போதிலும் வெங்கட் பிரபு-யுவன் சங்கர் ராஜா கூட்டணி எப்பவும் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தும், ஆனால் இந்த முறை அவர்கள் இல்லாதது ஏமாற்றம்தான். விண்டேஜ் யுவன் மீண்டும் வருவார் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

