கவினின் கிஸ் படத்தின் டிரைலர் அறிவிப்பு!
கவின் நடிக்கும் கிஸ் படத்தின் டிரைலர் வெளியாகும் தேதியினை படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் கவின் ஸ்டார் படத்திற்குப் பின் பிளடி பெக்கர் படத்தில் நடித்தார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் பெரிதாக வணிக தோல்வியை படம் சந்திக்கவில்லை.
இயக்குநர் வெற்றிமாறன் தயாரிக்கும் ‘மாஸ்க்’ எனும் மற்றொரு படத்தில் கவின் கதாநாயகனாக நடித்து முடித்துள்ளார்.
இதனிடையே, நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் ப்ரீத்தி அஸ்ரானி உடன் நடிகர் கவின் கிஸ் என்ற புதிய படத்தில் நடித்து முடித்துள்ளார்.
கிஸ் திரைப்படம் வருகிற செப்டம்பர் 19 ஆம் தேதி திரைக்கு வரயிருக்கிறது.
இந்த நிலையில், கிஸ் திரைப்படத்தின் டிரைலர் நாளை(செப். 9) மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: ஓடிடியில் கவனம் பெறும் பன் பட்டர் ஜாம்!
The team of Kavins Kiss trailer has announced the release date.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

