கதை இருக்காது.. டன் கணக்குல கேமியோ இருக்கும்.. ட்ரோலில் ரஜினி-கமல் காம்போ

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விலங்குபவர்கள் ரஜினி மற்றும் கமல். இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் இவர்களை அறிமுகப்படுத்தினார். ரஜினி சாதாரண பஸ் கண்டக்டராக நடிப்பின் மீது உள்ள ஆசையால் நாடகங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஒரு நாள் இதை பார்த்த பாலச்சந்தர் இவரை நம் படத்தில் நடிக்க வைத்து விட வேண்டியது தான் என்று அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் ரஜினிகாந்த் அதனைத் தொடர்ந்து தனக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை முறையாக பயன்படுத்தி தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக உயர்ந்தார்.

அது மட்டும் இல்லாமல் கோலிவுடில் வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களுக்கு இணையான ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். 75 வயதிலும் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கலக்கி வருகிறார். மற்றொருபுறம் அவருக்கு இணையான சமகாலங்களில் உதயமானவர் கமல்ஹாசன். இவரை பொறுத்தவரை வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து அதில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கக் கூடியவர்.

#image_title

படத்திற்கு படம் தன்னை வித்தியாசப்படுத்தி காட்டிக் கொள்வது மட்டுமல்லாமல் சினிமாவில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து கோலிவுட் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த துடிக்கும் ஒரு மகா கலைஞன். எண்பதுகளின் காலகட்டத்தில் ரஜினியை விட அதிகம் ரசிகர் படை வைத்திருந்தவர் கமல்ஹாசன். இருவருமே சம காலங்களில் இருந்து வந்தாலும் ஒரு காலகட்டத்தில் இருவருக்குமே தனி தனி ரசிகர் பட்டாளங்கள் உருவாகத் தொடங்கியது.

இருவருமே பல படங்கள் சேர்ந்து நடித்தாலும் ஒரு கட்டத்திற்கு பின் தனித்தனியாக நடிக்க முடிவெடுத்தனர். அதன் பிறகு இருவரும் இணைந்து படங்கள் நடித்து சுமார் 45 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. என்னதான் இவர்கள் இருவரும் ஒன்றாக படங்கள் நடிக்காமல் இருந்தாலும் இவர்களின் நட்பு இன்று வரை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் மீண்டும் சூப்பர் ஸ்டார், உலக நாயகன் காம்போ இணையுள்ளதாக செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டிருந்தது.

#image_title

இந்நிலையில் சைமா விருது வழங்கும் விழாவில் கமல்ஹாசன் அந்த செய்தியை உறுதி செய்துள்ளார். அதில் பேசிய ஆங்கர் சதீஷ்,” கமல்ஹாசரிடம் சார் சிறப்பான தரமான சம்பவம் உருவாகப் போவதாக கேள்விப்பட்டோம் அதைப்பற்றி கூற முடியுமா?” என்று கேட்டார். அதற்கு கமல்,” தரமான சம்பவம் என்று நாங்கள் சொல்ல முடியாது. அதை மக்கள் தான் தீர்மானிக்க முடியும். படம் பார்த்துட்டு மக்கள் சொல்லட்டும்.

”நடப்பதற்கு முன்பே தரமான சம்பவம் என்று சொன்னால் அது எப்படி. திடீர்னு தர தரன்னு இழுத்துருவாங்க. அதனால் படம் செஞ்சிட்டு காட்டுவோம்”. உடனே சதீஷ் ’அப்போ உலக நாயகனும் சூப்பர் ஸ்டார் இணைய போவது உறுதி ஆகிவிட்டது’ என்று சொல்கிறார். உடனே கமல்” அதில் எனக்கு ஒன்று ஆச்சரியம் இல்லை. வியாபார ரீதியாக இது ஆச்சரியமாக இருக்கலாமே தவிர, எங்களுக்கு இது எப்பவோ நடக்க வேண்டியது இப்பவாவது நடக்குதே நடக்கட்டும் அப்படிங்கற மாதிரி தான் இருக்கு”.

”இதுவரைக்கும் நாங்கள் ஒன்றாக நடிக்காமல் இருப்பதற்கு காரணம் நாங்கள் வளர்ந்து வந்த சமயங்களில் பிசினஸ் நல்லபடியாக போய்‌ கொண்டிருந்தது அதனால் இப்ப வேண்டாம் என்று நாங்களே தள்ளி வைத்துக் கொண்டோம். கடைசியில் அது நடக்கப்போகிறது” என்று கூறியுள்ளார். ஒரு பக்கம் சினிமா சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து காத்துக் கொண்டிருந்தாலும் மற்றொருபுறம் எப்படியும் இந்த படத்தில் கதை இருக்காது ஆனால் ஒவ்வொரு சீனுக்கும் ஒரு கேமியோ கண்டிப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் இப்பவே ட்ரோல் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.