காந்தி கண்ணாடி படத்தை அவாய்ட் பண்ணிய யுடியூப் விமர்சகர்கள்!.. பேமெண்ட் வரலயா?..

Gandhi Kannadi: விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமான பாலா அவ்வப்போது திரைப்படங்களிலும் நடித்து வந்தார். ஆனால் அது எல்லாம் சின்ன சின்ன வேடம்தான். இந்நிலையில்தான் காந்தி கண்ணாடி என்கிற படத்தில் அவருக்கு முக்கிய வேடம் கிடைத்தது.

இந்த படத்தை ஷெரிஃப் என்பவர் இயக்கியிருந்தார். இந்த படத்தில் பாலாவுக்கு ஜோடியாக நமிதா கிருஷ்ணமூர்த்தி நடித்திருந்தார். ஈவண்ட் மேனேஜ்மெண்ட் நடத்தி வரும் கதாபாத்திரத்தில் பாலா நடித்திருந்தார். பாலாவிடம் பாலாஜி சக்திவேல் ஒரு உதவி கேட்க அதை பாலா செய்தாரா? இறுதியில் என்ன ஆனது? என்பதுதான் படத்தின் கதை. உண்மையில் படத்தின் கதாநாயகன் என்றால் அது பாலாஜி சக்திவேல்தான். ஏனெனில் படத்தின் கதை அவரை சுற்றியே நகர்கிறது.

ஏற்கனவே மக்களுக்கு உதவி செய்பவர் என்கிற நல்ல இமேஜில் பாலா இருப்பதால் காந்தி கண்ணாடி படத்தில் அவருக்கு அழுத்தமான வேடம் இல்லை என்றாலும் அவரை யாரும் நெகட்டிவாக விமர்சனம் செய்யவில்லை. இந்த படம் கடந்த வெள்ளிக்கிழமை சிவகார்த்திகேயனின் மதராஸி படம் வெளியான அன்று வெளியானது. சில இடங்களில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இப்படத்தின் பேனர்களை, போஸ்டர்களை கிழிப்பதாகவும், தியேட்டர்களில் காட்சிகள் மறுக்கப்படுவதாகவும் இப்படத்தின் இயக்குனர் ஷெரிஃப் செய்தியாளர்களிடம் புகார் சொன்னார்.

#image_title

ஒருபக்கம் எல்லா படங்களையும் யூடியூப்பில் விமர்சனம் செய்பவர்களும் அதிக ஃபாலோயசர்ஸ்களை வைத்திருப்பவர்களுமான புளூசட்டை மாறன், பிரசாந்த் உள்ளிட்ட பலரும் காந்தி கண்ணாடி படத்தை விமர்சனம் செய்யவில்லை. பிரசாந்தை பொறுத்தவரை அவர் பணம் கொடுத்தால் மட்டுமே யூடியூபில் படத்தை பாசிட்டிவாக விமர்சனம் செய்வார் என்கிற புகார் அவர் மீது உண்டு. நீயா நானா நிகழ்ச்சியில் அவரை அருகில் வைத்துக்கொண்டே ஒருவர் இதை கூறினார்.

புளூசட்ட மாறனும் இப்படத்தை விமர்சனம் செய்யவில்லை. இதையடுத்து ‘சின்ன படத்தின் பட்ஜெட் என்றால் காந்தி கண்ணாடி போன்ற படங்களை விமர்சனம் செய்ய மாட்டீர்களா? காசு கொடுத்தால்தான் வீடியோ போடுவீர்களா? என ரசிகர்கள் பலரும் அவர்களை திட்டி வருகிறார்கள்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.