கமலுக்கு அடி விழுந்தால் ரஜினி துடிப்பார்.. நட்பின் சீக்ரெட் சொல்லும் சுஹாசினி
கோலிவுட் சினிமாவின் தனி அடையாளமாக விளங்குபவர்கள் ரஜினி மற்றும் கமல். ஒரே இண்டஸ்ட்ரியில் பயணித்தாலும் தங்களுக்கென்று தனித்தனி பாணியில் நடித்து ரசிகர்களை தன் வசமாக்கினார்கள். ரஜினி ஸ்டைல், பஞ்ச் டயலாக் என்று தனக்கென ஒரு வட்டத்தை உருவாக்கி அதன் மூலம் ரசிகர்களை சேர்க்க ஆரம்பித்தார்.
மற்றொருபுறம் கமல் தன் உடலை வருத்தி படத்திற்கு படம் வித்தியாசமான நடிப்பை கொண்டு வருவார். திரையுலையில் இவருக்கு தெரியாத வேலையே கிடையாது, அது மட்டுமில்ல நவீன காலத்தில் என்ன தொழில்நுட்பம் பயன்படுத்துகிறார்கள் என ஆராய்ந்து அதனை கற்றுக்கொண்டு தன்னை புதுப்பித்துக் கொண்டே இருப்பார். சினிமாவின் அறிவு கடல் கமல்ஹாசன்.

இன்றும் வளர்ந்து வரும் இளம் இயக்குனர்களுக்கும், நடிகர்களுக்கும் கமல்ஹாசன் மற்றும் ரஜினி முன்னுதாரணமாக இருந்து வருகிறார்கள். என்பதின் காலகட்டத்தில் இவர்கள் இருவரும் ஒன்றாக பல படங்களில் நடித்துள்ளனர். அதன் பிறகு தங்களுக்கான தனித்தனி பாதையை உருவாக்கி பயணிக்க தொடங்கி விட்டார்கள். இவர்கள் இருவரும் ஒன்றாக நடித்து சுமார் 46 வருடங்கள் உருண்டோடி விட்டது.
இந்நிலையில் சமீபத்தில் சைமா விருது வழங்கும் விழாவில் மீண்டும் ரஜினி கமல் காம்போ நடக்க இருப்பதாக கமல்ஹாசனே அறிவித்துள்ளார். ஏற்கனவே இதன் வதந்தி சமூக வலைதளங்களில் பரவி வந்தது. அதில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி மற்றும் கமல் இணைந்து நடிக்க உள்ளதாக பரவி வந்தது. தற்போது கமல்ஹாசன் அதை உறுதி செய்துள்ளார்.

இந்நிலையில் அதே மேடையில் சுஹாசினி கமலுக்கும் ரஜினிக்கும் இடையே உள்ள நட்பை எடுத்துக் கூறியுள்ளார். அதில்,” ஷூட்டிங் ஸ்பாட்டில் கமலுக்கு ஏதாவது அடிபட்டு விட்டது என்றால் ரஜினி எனக்கு போன் செய்வார். கமலுக்கு எப்படி இருக்கிறது? பலமா அடிபட்டதா? வலிக்குதா வலிக்குதா? என்று கேட்பார். கமல் வலிக்குது என்று சொன்னால் அவரே சொல்லிட்டாரு அப்போ அது பலமான அடியாக தான் இருக்கும். கவனித்துக் கொள்ளுங்கள் என்று அக்கறையோடு என்னிடம் சொல்வார். கமல்ஹாசன் வலிக்குது என்று சொன்னாலே அது உண்மையான அடி தான். அப்படி பதறக்கூடியவர்தான் ரஜினி” என்று சொல்லி இருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

