ஊரையே கூட்டி கூவியும் நடக்கலையே.. 25வது நாள் கூலி வசூல் இத்தனை கோடியா..

தமிழ் சினிமாவில் இந்த வருடம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நாகர்ஜுனா, அமீர்கான், சௌபின் சாஹிர், உபேந்திரா, சத்யராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடித்திருப்பார்கள். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்திருப்பார். பான் இந்திய அளவில் இந்த படம் உருவாகி இருக்கும்.


படம் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகெங்கும் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்பு மத்தியில் இந்த படம் வெளியானதால் கலவையான விமர்சனங்களை பெற்றது. ரஜினியை பயன்படுத்த தெரியாதபோல் பயன்படுத்தியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ் என அவரைத் தாக்கி ரசிகர்கள் விமர்சனங்களை எழுத தொடங்கி விட்டனர். அது மட்டும் இல்லாமல் படத்தில் நிறைய லாஜிக் மிஸ்டேக் இருக்கிறது. இது லோகேஷ் படம் தானா? என்று கடுமையான விமர்சனங்கள் எழுந்தது உண்டு.

#image_title

அது மட்டும் இல்லாமல் படத்திற்கு முதல் நாளே நெகட்டிவ் விமர்சனங்களை பரப்ப தொடங்கி விட்டனர். இருந்தபோதிலும் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நான்கு நாட்களில் கூலி உலக முழுவதும் 400 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் கூலி திரைப்படத்தின் 25ஆவது வசூல் நிலவரத்தை கூறியிருக்கிறார் மூத்த பத்திரிக்கையாளரும் சினிமா விமர்சகருமான செய்யாறு பாலு ,

மேலும் அவர் கூறுகையில், “கூலி படம் வெளியான நாள் முதல் இதற்கு ஊரை கூட்டி நெகட்டிவ் விமர்சனம் கூவ தொடங்கி விட்டனர். என்னதான் கூவினாலும் படத்தின் வசூலை யாராலும் தடுக்க முடியவில்லை. ஏற்கனவே இந்த படம் 400 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. தற்போது கூலி ரிலீஸ் ஆகி 25 நாட்கள் ஆகிறது. ஆனால் இன்னும் தயாரிப்பு நிறுவனம் ஒட்டுமொத்த வசூல் நிலவரத்தை கூறவில்லை.


ஆனால் எனக்கு கிடைக்கப் பெற்ற தகவல்படி உலகம் முழுவதும் 675 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஜெயிலர் திரைப்படம் 25வது நாள் முடிந்ததும் கலாநிதி மாறன் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் பரிசளித்தார். கூலி படத்திற்கும் அந்த மாதிரி ஒரு நிகழ்ச்சியை நாம் விரைவில் எதிர்பார்க்கலாம்”. என்று கூறியுள்ளார்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.