ஒட்டு மொத்த கமல் படங்களின் வசூலை தாண்டிய கூலி!.. அகில உலக சூப்பர்ஸ்டார் ரஜினிதான்!…
Coolie Collection: அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் ரஜினி சின்ன வேடத்தில் அறிமுகமானபோது அப்படத்தின் ஹீரோ கமல்ஹாசன். அதாவது ரஜினி சினிமாவில் நடிக்க சென்றபோது கமல் ஒரு ஸ்டாராக இருந்தார். துவக்கத்தில் கமலின் நண்பர் அல்லது அவர் படங்களில் வில்லன் போன்ற வேடங்களில் மட்டுமே ரஜினி 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
ஒரு கட்டத்தில் இருவரும் பேசி தனித்தனியாக நடிக்க துவங்கினர். ஆனால் அதில் சூப்பர் ஸ்டாரானது ரஜினிதான். ரஜினியின் வளர்ச்சியை கமலே எதிர்பார்க்கவில்லை. ரஜினி படங்களுக்கு கிடைத்த வசூல் கமல் படங்களுக்கு கிடைக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். ரஜினியும் கமலும் நண்பர்களாக இருந்தாலும் தொழில் முறையில் அவர்களுக்கு இடையே போட்டி இருந்தது. ‘இந்த போட்டியை ஏற்படுத்தியது நீங்கள்தான்’ என கமல் சொன்னாலும் உண்மையில் கமல் ரஜினியை தனது போட்டியாளராகவே நினைத்தார்.

ரஜினியை ஓவர்டேக் செய்ய கமல் பலமுறை முயற்சிகள் செய்தும் அது பலனளிக்கவில்லை. ஏனெனில் கமல் பரிசோதனை முயற்சி என்கிற பெயரில் புதுமையான கதைகளில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்தார். ரஜினியோ வசூலை குவிக்கும் பக்கா கமர்சியல் மசாலா படங்களில் நடித்து வசூல் சக்ரவர்த்தியாக மாறினார்.
ரஜினியின் சம்பளம் 70 கோடியாக இருந்தபோது கமலின் சம்பளம் 30 கோடியாக இருந்தது. லோகேஷ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படம் மட்டுமே 400 கோடி வசூலை தாண்டியது. இந்த படத்திற்கு பின்னர்தான் கமலின் சம்பளமும் ஏறி இருக்கிறது. இந்நிலையில்தான் கடந்த ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி ரஜினியின் கூலி படம் வெளியானது. இந்த படத்திற்கு பெரிய அளவில் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருந்தது.

எனவே இப்படம் ரிலீசுக்கு முன்பு 500 கோடி வியாபாரத்தை தாண்டியது. தற்போது படம் வெளியாகி 25 நாள் 25 நாட்கள் ஆன நிலையில் கூலி படம் 600 கோடி வசூலைத் தொட்டிருக்கிறது. இந்தியாவில் மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் கூலி படம் வசூலை பெற்றிருக்கிறது. குறிப்பாக வட அமெரிக்காவில் இப்படம் 6.8 மில்லியன் வசூலை அள்ளியிருக்கிறது. இது கமல்ஹாசன் நடித்து அங்கு வெளியான அவரின் அனைத்து படங்களின் மொத்த வசூலை விடவும் அதிகம் என சொல்லப்படுகிறது. இது பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

