Cook With Comali 6: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் டிக்கெட் டூ பினாலே போட்டியை வென்றது இந்த பிரபலமா?

Cook With Comali 6: பிரபல சமையல் ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இந்த வாரம் டிக்கெட் டூ பினாலே போட்டியில் வெற்றிபெற்ற போட்டியாளர் குறித்த விவரம் கசிந்துள்ளது.

சமையல் போட்டியில் மிகவும் பிரபலமான குக் வித் கோமாளியின் ஆறாவது சீசன் தற்போது நடந்து வருகிறது. இதில், லட்சுமி ராமகிருஷ்ணன், பிரியா ராமன், சீரியல் நடிகை ஷபானா, விவசாயி நந்தகுமார், நடிகர் ராஜு ஜெயமோகன் உள்ளிட்டோர் தற்போது டாப் 5 இடத்தில் உள்ளனர்.

கடந்த மூன்று வாரங்களாக இரு குழுக்களாக பிரிந்த போட்டியாளர்கள் மோதிக் கொண்டு வந்தனர். அதில் சிகப்பு அணியை சேர்ந்த ராஜு, உமைர், பிரியா ராமன் தொடர்ந்து மூன்று வாரங்களாக தோல்வியை தழுவி வந்தனர்.

இதன் காரணமாக நேற்று இவர்களில் ஒருவர் இளமை செய்ய குக் ஆப் நடைபெற்றது. இதில் அசைவ உணவு சமைக்கப்பட்டதால் பிரியா ராமனே அதிகமாக வெளியேறுவார் என பலரும் எண்ணி வந்தனர். ஆனால் அதிர்ச்சி தரும் வகையில் நிகழ்ச்சியில் இருந்து உமைர் வெளியேறினார்.

cook with comali 6
cook with comali 6

இந்நிலையில் இன்று முதல் பைனலிஸ்ட்டை தேர்வு செய்யும் டிக்கெட் டூ பினாலே போட்டி நடைபெற்றது. அதன் வித்தியாசமாக சமைத்து சின்னத்திரை நடிகை ஷபானா முதல் பைனலிஸ்ட் ஆக இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறார்.

 இதன் மூலம் அடுத்த அடுத்த வாரங்களில் அவர் விளையாட மாட்டார் என கூறப்படுகிறது. இதற்கடுத்து, அடுத்த வாரம் மற்ற பைனாலிஸ்ட்களை தேர்வு செய்யும் போட்டி நடத்த இருக்கிறது. அதற்கு அடுத்த வாரம் மீண்டும் வைல்ட் கார்ட் மூலம் எலிமினேட் செய்யப்பட்டவர்கள் உள்ளே வர இருக்கின்றனர்.

இதனால் இன்னும் சில வாரங்களில் பிக் பாஸ் ஒன்பதாவது சீசன் தொடங்க இருப்பதால் விரைவில் இந்த நிகழ்ச்சியை முடிக்க தயாரிப்பு நிறுவனம் விரைந்து முடிக்க செயல்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.