பாசிட்டிவ் ரிவ்யூவால் எகிறும் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!… வசூலை குவிக்கும் மதராஸி…
Madharaasi: ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து கடந்த வெள்ளிக்கிழமை வெளியான திரைப்படம் மதராஸி. சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் 300 கோடி வசூலைத் தொட்டு சிவகார்த்திகேயனை பெரிய நடிகராக மாற்றி விட்டது. இந்த படத்திற்கு பின் 60 முதல் 70 கோடி வரை சம்பளம் கேட்கிறார் சிவகார்த்திகேயன். ஆனால் எல்லா படமும் அமரன் அளவுக்கு வசூல் செய்யுமா என என்கிற கேள்வியும் இருக்கிறது.
இந்நிலையில்தான் மதராஸி திரைப்படம் வெளியாகி தியேட்டரில் ஓடிக் கொண்டிருக்கிறது. அமரன் படத்திற்கு இருந்த வரவேற்பு மதராஸிசி படத்திற்கு இல்லை என்றே சொல்ல வேண்டும். அதற்கு இரண்டு காரணங்களை சொல்லலாம். அமரன் படம் ஒரு நிஜ ராணுவ வீரரின் சொந்த வாழ்வில் நடந்த சோக கதை. கணவனை இழந்த ஒரு பெண்ணின் பார்வையில் படம் சென்றது. அதுவே பெரிய அனுதாபத்தை உருவாக்கியது. படத்தின் மெகா வெற்றிக்கு அதுவே முக்கிய காரணமாக இருந்தது. ஆனால் மதராஸி படத்தில் அப்படி எதுவும் இல்லை. அதோடு இந்த படத்திற்கு பெரிய அளவில் புரமோசன் செய்யப்படவில்லை. அதனாலேயே டிக்கெட் முன்பதிவு மந்தமாக இருந்தது.
அதேநேரம் படம் வெளியாகி முதல் காட்சி முடிந்தவுடன் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்தது. படத்தில் சிவகார்த்திகேயன் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகவும், முதல் பாதி ஆக்சன், காதல் கலந்து இருப்பதாகவும், இரண்டாம் பாதி முழுக்க ஆக்சன் காட்சிகள் நிரம்பி இருப்பதாகவும், முருகதாஸுக்கு கண்டிப்பாக மதராஸி ஒரு கம்பேக் படமாக அமையும் என்றும் பலரும் பாசிட்டிவாக விமர்சனம் செய்தார்கள்.

பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூகவலைகளில் மதராஸி படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்ததால் படத்தின் டிக்கெட் முன்பதிவில் முன்னேற்றம் ஏற்பட்டது. படம் வெளியான முதல் நாள் இப்படம் இந்தியாவில் 13.65 கோடி வசூல் செய்ததாக சொல்லப்பட்டது இரண்டாம் நாளான நேற்று இப்படம் 11.75 கோடி வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது.
அதாவது படம் வெளியாகி இரண்டு நாட்களில் 25.40 கோடியை வசூல் செய்திருக்கிறது. வெளிநாடுகளில் எப்படியும் இப்படம் 7 கோடி வசூலை பெற்றிருக்கும் என கணிக்கப்பட்டால் உலக அளவில் கடந்த இரண்டு நாட்களில் 32 கோடியை தாண்டும் என கணிக்கப்படுகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


