Trisha: விஜய் பாலிட்டிக்ஸ்! மேடையில் பரபரப்பை ஏற்படுத்திய திரிஷா.. கமல் ரியாக்ஷன்
Trisha: சமீபத்தில் சைமா விருது வழங்கும் விழாவில் திரிஷா விஜயின் அரசியல் பற்றி மேடையில் பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக இருந்து வருபவர் நடிகர் விஜய். அவர் தற்போது எச் வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படம் அடுத்த வருடம் பொங்கல் ரிலீஸ் ஆக வெளியாக இருக்கின்றது.
அதுதான் விஜய்க்கு கடைசி படம். அதன் பிறகு முழு நேர அரசியல்வாதியாக தன்னை ஈடுபடுத்த இருக்கிறார் விஜய். அதற்கு முன் சமீபத்தில் மதுரையில் பெரிய அளவில் மாநாட்டையும் நடத்தி பிரம்மாண்டப்படுத்தி விட்டார். திருச்சியில் தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிக்க இருக்கிறார் விஜய். இப்படி அடுத்தடுத்து அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
இன்னொரு பக்கம் அவருடைய அரசியலையும் நடிகை திரிஷாவையும் சம்பந்தப்படுத்தி அவருக்கு பிடிக்காத சில பேர் இணையத்தில் பல வதந்திகளை பரப்பி வருகின்றனர். விஜயின் தளபதி திரிஷா தான் என்றும் கூறி வருகின்றனர். ஆனால் இது எதற்குமே த்ரிஷா தரப்பில் இருந்தும் விஜய் தரப்பிலிருந்தும் எந்த ஒரு பதிலும் வரவில்லை. இன்னொரு பக்கம் மனைவியை லண்டனுக்கு அனுப்பிவிட்டு இங்கு விஜய் ஜாலியாக இருக்கிறார் என்றும் கூறி வருகிறார்கள்.
திரிசா மட்டுமல்ல நடிகை கீர்த்தி சுரேஷையும் விஜய் உடன் சம்பந்தப்படுத்தி பல வதந்திகளை பரப்பி வருகின்றனர். இதற்கிடையில் நீண்ட நாளுக்கு பிறகு விஜயின் மனைவி சங்கீதா லண்டனில் இருந்து சென்னை திரும்பியுள்ள ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் சைமா விருது வழங்கும் விழாவில் திரிஷாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்துள்ளது .
அப்போது அவரிடம் விஜயின் புகைப்படத்தை ledயில் காட்டி இவரிடம் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்ற ஒரு கேள்வியை கேட்டனர். அந்த புகைப்படத்தை திரிஷா பார்த்ததும் புன்முறுவலுடன் இருக்க அரங்கமே அதிர்வலையாக மாறியது .உடனே த்ரிஷா இவருக்கு நான் சொல்ல வேண்டும் என்பது அவர் ஒரு புதிய பயணத்தை ஆரம்பத்து இருக்கிறார் .அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் .அவருடைய எல்லா கனவுகளும் வெற்றியாக வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை என ஆங்கிலத்தில் கூறியிருந்தார். அதைக் கேட்டதும் கமல் சிரித்தபடியே பார்த்தார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


