கேப்டன் மனைவிக்கு எதுக்கு பென்ஷன்?.. ட்ரோல் பண்ணவங்களுக்கு பிரேமலதா ‘நச்’ பதில்..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் கேப்டன் விஜயகாந்த். தனது கடின உழைப்பால் சினிமாவில் உச்சம் தொட்டார். கேப்டனின் குணமே தேடி சென்று மற்றவர்களுக்கு உதவுவார், உதவி என்று தன்னை தேடி வந்தவர்களுக்கும் உதவி செய்வார். அதிலும் சாப்பாடு கேப்டனை மாதிரி யாரும் போட முடியாது.
அவரது சூட்டிங்கில் வாழை இலை விரித்து கறி விருந்து நடக்கும். தன்னலம் கருதாது பிறர் நலம் கருதி வாழக்கூடிய மனிதர். அரசியலில் அடுத்த எம்ஜிஆர் போல வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது தமிழக மக்களுக்கு கொடுத்து வைக்காமல் போனது. கேப்டனை இகழ்ந்தவர்கள் எல்லாம் அவரது அவரது மறைவிற்க்கு பின்னர் புகழ்ந்து வருகின்றனர். அவர் இருக்கும்போது அவரை மதிக்காமல் அவர் சென்ற பின்பு தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி என்ன பிரயோஜனம்.
திரை துறையில் தற்போது வரும் படங்களில் அவருக்கான மரியாதை கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் வெளியான லப்பர் பந்து திரைப்படத்தில் கெத்து தினேஷ் விஜயகாந்தின் ரசிகராக நடித்திருப்பார். அதன் பிறகு விஜயின் கோட் படத்தில் விஜயகாந்தை எஐ மூலம் பயன்படுத்தி இருப்பார்கள். பின்னர் சண்முக பாண்டியன் படத்தில் பயன்படுத்தி இருப்பார்கள்.

இப்படி விஜயகாந்தை கொண்டாடி வருகிறார்கள். மக்கள் விஜயகாந்தை கொண்டாடுவதற்கு காரணம் ஒரு நடிகர் என்பதைத் தாண்டி மக்களுக்காக அவர் செய்த உதவிகள் தான். அதிலும் குறிப்பாக பசி என்று வந்தவருக்கு வயிறார சாப்பாடு போட்டு அழகு பார்ப்பவர். இன்று பல நடிகர்கள் இதே போல் மக்களுக்கு உதவி செய்கிறார்கள் என்றால் அதற்கு விதை கேப்டன் விஜயகாந்த் போட்டது.
இந்நிலையில் பிரேமலதா விஜயகாந்த் சமீபத்தில் விஜயகாந்தின் மறைவிற்குப் பிறகு ஓய்வூதியம் வேண்டுமென்று விண்ணப்பித்திருந்தார். விஜயகாந்த் 2006 முதல் 2016 வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். தொடர்ந்து பத்து ஆண்டுகள் அவர் எம்எல்ஏவாக இருந்ததால் தமிழக அரசின் விதிப்படி அந்த குடும்பத்திற்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.
இதன் அடிப்படையில் தான் பிரேமலதா விண்ணப்பித்துள்ளார். ஆனால் இதற்கு பல விமர்சனங்கள் எழுந்தது, என்னமோ அவர்களிடம் பணமே இல்லாதது போல் இப்படி 15 ஆயிரம் பென்ஷன் கேட்கிறார்களே? என்று தொடர்ச்சியாக விமர்சனம் எழுந்தது. இந்த விமர்சனங்களுக்கு எல்லாம் பிரேமதா நச்சுனு பதில் கொடுத்துள்ளார்.
அதில்,” கேப்டனுக்கு மாதாமாதம் வரும் 15 ஆயிரம் ரூபாய் பென்ஷன் தொகையை பற்றி இவங்க என்ன பண்ணப் போறாங்கன்னு இட்டுக்கட்டி பேசுறாங்க கேப்டனுக்கு மக்கள் கொடுத்த அந்த சம்பளக்காசை வள்ளல் விஜயகாந்த் டிரஸ்ட்க்கு தான் போய்கிட்டு இருக்கு. அதன் மூலமா பல ஏழை மக்களுக்கு எங்களால உதவி செய்ய முடியும்.” என்று பதிலளித்துள்ளார். கேப்டன் மறைந்தும் மக்களுக்காக உதவும் அவரின் குடும்பத்தை ரசிகர்கள் பாராட்டி வருகின்றன.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


