சைலன்டா காய் நகர்த்தும் விஜய்.. ஒருவேளை பிடிவாதத்தை கைவிட்டுட்டாரோ..?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். சினிமாவில் உச்சம் தொட்டுவிட்டு விஜய் அரசியலில் களம் இறங்கி உள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்காக முனைப்போடு செயல்பட்டு வருகிறார். தனது அரசியல் வருகையை விக்கிரவாண்டியில் கட்சி சார்பில் முதல் மாநில மாநாடு நடைபெற்றது.

அங்கு தனது அரசியல் வருகையை பகிரங்கமாக அறிவித்தார். அது மட்டுமில்லாமல் தன்னுடைய அரசியல் எதிரிகளையும் அடையாளப்படுத்தினார். முதல் மாநாட்டில் விஜய் பேச்சு ரசிகர்களின் கவனத்தை பெற்றது. ஏனென்றால் விஜய் பொதுவெளியில் பெரிதும் பேசி நாம் பார்த்ததில்லை. முதல் முறையாக இந்த மாநாட்டில் அனல் பறக்க பேசியது அரசியல் எதிரிகளை கலங்கடிக்க செய்தது.

இந்நிலையில் தனது இரண்டாவது மாநில மாநாட்டை மதுரையில் நடத்தினார். இந்த முறை அமைச்சர்களை பங்கமாக கலாய்த்தது மட்டுமின்றி தனது அனல் பறக்கவும் பேசியுள்ளார். விஜயின் பேச்சு பலரின் விமர்சனங்களுக்கு ஆளானது. இந்நிலையில் விஜய் இவ்வாறு செய்கிற அரசியல் எல்லாம் எதிர்வரும் 2026 தேர்தல் வரை தான். அதன்பின் அவர் வந்த பாதைக்கு திரும்பி விடுவார் என்று பல அரசியல் பிரமுகர்கள் விமர்சனம் செய்கின்றனர்.

#image_title

விஜய் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ”ஜனநாயகன்” படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இந்நிலையில் மூத்த பத்திரிக்கையாளர் சினிமா விமர்சகருமான வலைப்பேச்சு பிஸ்மி விஜயின் திரைப்பயணம் எப்படி இருக்கப் போகிறது என்று கூறியுள்ளார் அதில்,” விஜய் சினிமாவில் இருந்து வெளியாகிறேன் என்று அறிவித்த பிறகும் அவருடன் வேலை பார்த்த யாரையும் தன்னுடைய வீட்டை விட்டு வெளியே போங்கள் என்று கூறியது இல்லை. விஜய் பொறுத்தவரை அவரிடம் வேலை செய்பவர்கள் இருக்கிற வரை இருக்கட்டும் என்று சொல்லிவிட்டாராம்”.

”விஜய் படப்பிடிப்பு முடிந்த பின்னரும் அவர்களெல்லாம் வெவ்வேறு கம்பெனியில் வேலை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். இருந்தாலும் அவர்கள் அங்கேயேதான் இருக்கிறார்கள். ஆனால் அது புரியாமல் விஜய் தன்னிடம் வேலை செய்த பணியாட்களை வெளியேற்றுகிறார் என்று பொய்யான வதந்திகளை பரப்பி வருகின்றனர். அதில் சில பேர் விஜய் சினிமாவை விட்டு போன பின்னரும் அவர்களையெல்லாம் தங்க வைத்துள்ளார்”.

”அப்போ மீண்டும் அவர் சினிமாவில் நடிக்க போறாரா? என்ற கேள்வியை முன் வருகின்றனர். ஆனால் விஜய் பொருத்தவரை ஒரு விஷயத்தில் முடிவெடுத்து விட்டார் என்றால் அவர் பேச்சை அவரே கேட்க மாட்டார். அதனால் 99 சதவீதம் விஜய் மீண்டும் சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு இல்லை. என்று சில பேர் சொல்கிறார்கள். அதேபோல நாங்களும் சினிமாவில் நடிக்கப் போகிறார் என்று சொல்லிக் கொண்டு வருகிறோம். கடைசியில் எது நடக்கப்போகிறது என்பது தெரியவில்லை”. என்று கூறியுள்ளார்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.