குட்டி வீரப்பன், லோக்கல் புஷ்பா... கவனம் ஈர்க்கும் பிருத்விராஜ் பட டீசர்!

நடிகர் பிருத்விராஜ் நடித்துள்ள விலாயாத் புத்தா என்ற புதிய படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

புஷ்பா பட பாணியில் சந்தன மரக் கட்டையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது.

ஊர்வசி தியேட்டர்ஸ், ஏவிஏ புரடக்‌ஷன் உடன் இணைந்து உருவாகியுள்ள இந்தப் படத்தை ஜெயன் நம்பியார் இயக்கியுள்ளார்.

பிரபல மலையாள எழுத்தாளர் ஜி.ஆர்.இந்துகோபன் எழுதிய ’விலயாத் புத்தா’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார்கள்.

ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.

தமிழ் டீசரில் குட்டி வீரப்பன், புஷ்பா இன்டர்நேஷ்னல், நான் லோக்கல் என்ற வசனங்கள் கவனத்தை ஈர்த்துள்ளன.

The teaser of the new film titled Vilayaath Buddha starring actor Prithviraj has been released.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.