மதராஸி முதல்நாள் வசூல்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் முதல்நாளில் எவ்வளவு வசூலித்ததென படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் மட்டுமான வசூலை மட்டுமே குறிப்பிட்ட, உலக அளவில் எவ்வளவு என்பதைக் குறிப்பிடாதது ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்துள்ளது.

இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை ருக்மணி வசந்த், நடிகர் வித்யுத் ஜமால் உள்ளிட்டோர் நடிப்பில் மதராஸி திரைப்படம் நேற்று (செப்.5) வெளியானது.

இந்தப் படத்துக்கு போதிய அளவு புரமோஷன் செய்யாததால் படத்தின் மீது பெரிதாக எதிர்பார்ப்புகள் எழவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தற்போது படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.

இந்நிலையில், தமிழகத்தில் மட்டும் ரூ.12.8 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.

விஜய், அஜித்துக்கு அடுத்ததாக மிகப்பெரிய நாயகனாக உருவாகியிருக்கிறார்.

சிவகார்த்திகேயனுக்கு இந்தப் படம் உலக அளவில் எவ்வளவு வசூல் செய்தது என்ற தகவலை படக்குழு எப்போது வெளியிடுமென அவரது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

#Madharaasi begins its RAMPAGE at the box office

Day 1 GROSS of 12.8 CRORES in Tamil Nadu and a blockbuster weekend loading with massive bookings all over

Book your tickets now!
️ https://t.co/DiYIeLe7q1 #MadharaasiMadness #BlockbusterMadharaasi pic.twitter.com/MRTgB1AGHS

— Sri Lakshmi Movies (@SriLakshmiMovie) September 6, 2025

The team of Sivakarthikeyans film Madarasi has officially announced the opening day box office collection.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.