Siragadikka Aasai: மீண்டும் தொடங்கிய கிரிஷ் பிரச்னை… சிக்க போகும் ரோகிணி.. முத்துவின் முடிவு என்ன?
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
கிரிஷ் படிக்கும் பள்ளி குறித்து தெரிந்துக்கொள்ளும் மீனா அந்த ஸ்கூலுக்கு வந்திருக்கேன். நீ அங்க படிக்கிறேனு எனக்கு தெரியாது என்கிறார். நான் உங்களை ஒரு நாள் பாத்தேன் எனக் கூற கூப்ட்ருக்க வேண்டியதுதானே எனக் கூற கூப்பிட்டேன் உங்களுக்கு கேட்கலை என்கிறார்.
கவனிச்சிருக்க மாட்டேன் போல என மீனா கூறுகிறார். முத்து உன்கிட்ட என் நம்பர் இருக்குல எனக்கு கால் பண்ணி இருக்கலாமே எனக் கேட்க பேரண்ட்ஸுக்கும், கார்டியனுக்கும் தான் கால் செய்யலாம் எனக் கூறிவிடுகின்றனர்.
சீதா இவன் காணாமல் போனதை தேடிட்டு இருக்கானு சொன்னீங்களே போலீஸில கம்ப்ளையண்ட் கொடுத்திருந்தா என்ன செய்றது எனக் கேட்க அந்த மேனேஜரை எனக்கு தெரியும். நம்ம போய் பேசி கிரிஷ் ஏன் இப்படி பண்ணானு தெரிஞ்சிப்போம் என்கிறார்.
முத்து, மீனா கார் அந்த ஸ்கூலுக்குள் வருவதை பார்க்கும் ரோகிணி இவங்க ஏன் இங்க வராங்க என யோசிக்கிறார். மீனா அந்த மேனேஜரை பார்த்து கிரிஷ் தங்களுடன் இருக்கும் விவரத்தை கூறவும் அவர் நிம்மதி அடைகிறார். உங்களிடம் எப்படி வந்தான் எனக் கூற டிக்கியில் இருந்தது முதல் காப்பாற்றியது வரை சொல்கின்றனர்.
அவர் மகேஸ்வரிக்கு கால் செய்து கிரிஷ் கிடைத்த விஷயத்தை சொல்லி அவரை வரச் சொல்கிறார். மகேஸ்வரி உள்ளே வருவதை பார்க்கும் மீனா நீங்க ரோகிணி பிரண்டு தானே எனக் கேட்க நான் கிரிஷ் அம்மா கல்யாணிக்கும் பிரண்ட் எனக் கூறிவிடுகிறார்.
கிரிஷை காப்பாற்றியதை சொல்லிவிட மகேஸ் அவன் எங்கே எனக் கேட்க எங்க வீட்டில் இருக்கான். பயந்து போய் இருக்கான். நாளைக்கு அழைச்சிட்டு வருவதாக சொல்ல நான் அவங்க அம்மாவிடம் பேசிவிட்டு சொல்வதாக மகேஸ்வரி சொல்லிவிடுகிறார்.
ரோகிணியிடம் கால் செய்து கேட்க அவர் இப்போ அவங்க விடவும் மாட்டாங்க. நீ ஓகே சொல்லு நான் என்ன செய்றதுனு யோசிக்கிறேன் என்கிறார். சரியென மகேஸ்வரி வந்து சொல்லிவிடுகிறார். கிரிஷ் அம்மா வரலையா எனக் கேட்க அவ வேலையா மாட்டிக்கிட்டா என சமாளிக்கிறார்.
முத்து தகவல்களை எழுதி கேட்கிறார் மனேஜர். அந்த நேரத்தில் மகேஸ்வரியிடம் மீனா கிரிஷ் குறித்தும் அவர் அம்மா குறித்து கேட்க எஸ்கேப் ஆகிவிடுகிறார். வீட்டில் யோசித்துக்கொண்டு இருக்கும் ரோகிணி, வித்யாவிடம் போன் பேசிக்கொண்டே வருவது போல ஹாலுக்கு வருகிறார்.

மகேஸ்வரி தான் கிரிஷோட கார்டியன். இப்போ முத்து, மீனா அவனை அழைச்சிட்டு போனதால் அவங்க கோபமா இருக்காங்களாம். அதனால் ஆக்ஷன் எடுக்க போவதாகவும் சொல்லிவிட்டு இருப்பதாக கதை விடுகிறார்.
உடனே முத்து, மீனா வர விஜயா நக்கலாக பேச தொடங்குகிறார். வீட்டில் நடந்த விஷயங்களை சொல்லும் முத்து கிரிஷின் அம்மா வரணும். இல்ல நான் கண்டுபிடிப்பேன் எனக் கூறுகிறார். இதனால் ரோகிணி உறைந்து நிற்கிறார். மீனா என் உயிரை கிரிஷ் காப்பாத்தி இருக்கான். அந்த நன்றிக்காக அவன் வாழ்க்கை அப்படியே போகட்டும்னு விட முடியாது என பதிலடி கொடுக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


