Cook With Comali 6: குக் வித் கோமாளியில் இந்த வாரம் எலிமினேஷன் இவரா? உங்களுக்கு மனசாட்சியே இல்லையா?

Cook With Comali 6: பிரபல சமையல் ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 6ல் இந்த வாரம் வெளியேறிய செலிபிரிட்டி குறித்த அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. 

குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. அந்த வகையில் தற்போது ஆறு போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்தனர். லட்சுமி ராமகிருஷ்ணன், பிரியா ராமன், உமைர், ராஜு, சபானா, நந்தகுமார் உள்ளிட்டோர் உள்ளனர். 

இதில் கடந்த மூன்று வாரமாகவே ஆறு போட்டியாளர்களும் இரண்டு டீமாக விளையாடி வந்தனர். இதில் மூன்று வாரமாகவே ரெட் டீமை சேர்ந்த உமைர், ராஜி, பிரியா ராமன் தோற்று வந்தனர். ஏற்கனவே சொன்னது போல தோற்ற டீமில் இருந்து ஒருவர் வெளியேற வேண்டும் என கூறப்பட்டது. 

அந்த வகையில் இந்த மூவருக்கும் இரண்டு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அந்த வகையில் பிரியா ராமன் குக் ஆஃப் செய்யலாம் எனக் கேட்க உமைர் மதிப்பெண் மூலம் செல்லலாம் எனக் கேட்டார். இதற்கிடையில் ராஜி எடுத்த முடிவால் தற்போது மீண்டும் குக் ஆஃப் மோத முடிவெடுக்கப்பட்டது. 

அந்த வகையில் இந்த வார தொடக்கத்தில் உமைர், பிரியா ராமன், ராஜி மூவருக்கும் போட்டி நடந்தது.  அதில், மூன்று பொருளை கொடுத்து ஒன்றை தேர்வு செய்ய சொல்லுகின்றனர்.

cook with comali 6
cook with comali 6

அந்த வகையில் பேபி கார்ன், தாமரை தண்டு, ஈரல் என மூன்று கொடுக்கப்பட்ட நிலையில் ஈரலை போட்டிக்கு தேர்வு செய்கின்றனர். போன வாரம் போல இந்த முறையும் நடுவர் யாரென தெரியாமல் ஜட்ஜ் செய்ய போவதாக கிளம்புகின்றனர். 

அந்த போட்டியில் தற்போது உமைர் எலிமினேட் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ராஜி மற்றும் பிரியா ராமன் அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருக்கின்றனர். 

இந்த வாரம் டிக்கெட் டு பினாலே நடக்க இருப்பதால் அடுத்த வாரம் வைல்ட் கார்ட் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த வாரம் செல்லும் உமைர் அடுத்த வாரம் உள்ளே வர வாய்ப்பு இருப்பதாகவே கூறப்படுகிறது. 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.