வெற்றிமாறனால் தாணு கம்பெனியை மூடுறாரு.. தனக்கு ஒரு நியாயம்..ஊருக்கு ஒரு நியாயமா?…

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன். இதுவரை தான் எடுத்த அனைத்து படங்களையும் வெற்றி படங்களாக கொடுத்துள்ளார். ஒரு இயக்குனராக முன்னிலை பெற்றாலும் ஒரு தயாரிப்பாளராக தன்னைப் போல வரத் துடிக்கும் இளம் இயக்குனர்களுக்கு உதவ வேண்டும் என்று கிராஸ் ரூட் புரொடக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்.

இந்த நிறுவனத்தின் மூலம் மனுஷி மற்றும் பேட் கேர்ள் போன்ற இரு திரைப்படங்களை இவர் தயாரித்தார். படம் தயாரித்ததற்கு கூட வெற்றிமாறன் இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்க மாட்டார், அதை வெளியிட அவர் பட்ட பாடு அதனால் மன அழுத்தம் உருவாகி தயாரிப்பு நிறுவனத்தை விடுவதாக சமீபத்தில் அறிவித்தார். இந்நிலையில் வெற்றிமாறனால் தயாரிப்பாளர் தாணுவும் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தை மூட வேண்டும் என்று காட்டமாக கூறி இருக்கிறார் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணி மேலும் அவர் கூறியதாவது

#image_title

”வெற்றிமாறன் ஒரு பெரிய இயக்குனர் வரிசையாக ஹிட் கொடுத்திருக்கிறார். அதேசமயம் அவர் சூர்யாவை வைத்து வாடிவாசல் என்கிற படத்தை ஆரம்பித்தார். அதன் ப்ரொடியூசர் தயாரிப்பாளர் தாணு. பெரிய பெரிய ஹீரோக்களை வைத்து நிறைய படங்களை எடுத்த முன்னணி தயாரிப்பாளர் அவர்”.

”வெற்றிமாறன் சூர்யாவை வைத்து வாடிவாசல் திரைப்படத்தை எடுப்பதற்காக தயாரிப்பாளர் தாணுவிடம் முழு பணத்தையும் வாங்கி உள்ளார். தயாரிப்பாளர் என்னிடம் வந்து அஞ்சு வருஷம் ஆச்சு படம் என்ன நிலைமையில் இருக்குன்னு எனக்கே தெரியல அப்படின்னு புலம்புறாரு. அந்த மாதிரி ஒரு புரொடியூசரை இந்த மன நிலைக்கு கொண்டு வந்திருக்காரு வெற்றிமாறன் இது எந்த வகையில் நியாயம்?. உங்க புரொடக்ஷன் நிறுவனத்தை எனக்கு கட்டுப்படி ஆகவில்லை என்று மூடி விடுகிறீர்களே. இப்போ உங்களால் அவர் கம்பெனியை மூடுற நிலைமைக்கு வந்துட்டாரு”.

#image_title

”இது வெற்றிமாறனுக்கு மட்டும் கிடையாது. நிறைய டைரக்டர்கள் இன்னைக்கு இப்படித்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். தயாரிப்பாளர்களின் மன வேதனையை எங்கே சொல்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் தமிழ் சினிமா இவ்வளவு மோசமான நிலைமைக்கு சென்று கொண்டிருக்கிறது. அதனால் வெற்றிமாறன் கூடிய விரைவில் வாடிவாசல் திரைப்படத்தை தொடங்கி அதை நல்லபடியாக முடித்து தயாரிப்பாளர் தாணுவிடம் கொடுங்கள்”. என்று கூறியுள்ளார்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.