பேட் கேர்ள் முதல் நாள் வசூல்!.. வெற்றிமாறன் கம்பெனிய மூடுறது கன்பார்ம்!…
Bad Girl Movie: தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராக இருப்பவர் வெற்றிமாறன். தனுஷை வைத்து பொல்லாதவன், ஆடுகளம், அசுரன் ஆகிய படங்களை இயக்கி இரண்டு தேசிய விருதுகளை வாங்கியவர்.
இந்திய திரை உலகில் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக பார்க்கப்படுகிறார். அதனால்தான் அவரின் இயக்கத்தில் நடிக்க மற்ற மொழிகளில் உள்ள பெரிய நடிகர்களும் ஆசைப்படுகிறார்கள்.
காமெடி நடிகராக இருந்த சூரியை விடுதலை திரைப்படம் மூலம் ஹீரோவாக மாற்றினார் வெற்றி மாறன். தற்போது தொடர்ந்து பல படங்களிலும் ஹீரோவாக நடிக்க துவங்கி விட்டார் சூரி. ஒருபக்கம் திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார் வெற்றிமாறன். ஏற்கனவே சில படங்களை தயாரித்திருந்த நிலையில் தனது உதவியாளர் வர்ஷா பரத் இயக்கிய பேட் கேர்ள் என்கிற திரைப்படத்தின் தயாரித்தார்.

கலாச்சாரத்தை காப்பாற்ற வேண்டியது பெண்ணின் வேலை இல்லை. பெண்ணை அடிமைப்படுத்தக் கூடாது. அவள் சுதந்திரமானவள் என்கிற கருத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை உருவாக்கி இருந்தார்கள். இப்படம் தயாராகி பல மாதங்களாகியும் வெளியாகாமல் இருந்தது. அதற்கு காரணம் இப்படத்தின் பல காட்சிகளையும் மாற்று மாறு சென்சார் போர்டு அதிகாரிகள் கூறினார்கள். எனவே நீதிமன்றம் சென்று, நீதிபதி படத்தை பார்த்து சில மாறுதல்களை சொல்ல அந்த மாறுதலை செய்த பின் நேற்று படம் வெளியானது.
ஒருபக்கம் மனுஷி என்கிற படத்தையும் தயாரித்து இருந்தார் வெற்றிமாறன். இந்த படமும் சென்சாரில் சிக்கி இருக்கிறது. இதனால் விரத்தி அடைந்து வெற்றிமாறன் பேட் கேர்ள் பட செய்தியாளர் சந்திப்பில் ‘இனிமேல் படங்களை தயாரிப்பதில்லை என முடிவு செய்திருக்கிறேன். எனது தயாரிப்பு நிறுவனத்தை மூடுகிறேன்’ என பேசினார். அதே நேரம் பேட் கேர்ள் திரைப்படம் நல்ல வசூலை பெற்றால் அவர் தொடர்ந்து படங்களை தயாரிப்பார் என சிலர் பேசினார்கள்.
இந்நிலையில் படம் வெளியான ஒரு நாளில் பேட் கேர்ள் திரைப்படம் தமிழ்நாட்டில் ஏழு லட்சம் வசூல் செய்திருக்கிறது. குறைந்தபட்சம் இந்த படத்திற்கு வெற்றிமாறன் 10 கோடிகளை செலவு செய்திருப்பார் என நம்பப்படுகிறது. படத்தின் வசூலை பார்க்கும்போது கண்டிப்பாக பேட் கேர்ள் ஒரு வெற்றிப் படமாக அமையாது என்றே கணிக்கப்படுகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


