ஒரு நாளில் மாறிடுச்சே!.. 2வது நாளில் வசூலை குவிக்கும் மதராஸி…
Madgharaasi: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மணி வஸந்த் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து நேற்று வெளியான திரைப்படம் மதராஸி. ஒரு விதமான மன நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் சிவகார்த்திகேயன், அவரின் காதலி ருக்மணி வசந்த், ஒருபக்கம் துறைமுகத்தில் துப்பாக்கிகளை கடத்தும் வில்லன் கும்பல், அவர்களிடம் சிக்கிக் கொள்ளும் ருக்மணி வசந்த், அவர்களை காப்பாற்ற எந்த எல்லைக்கும் போகும் சிவகார்த்திகேயன், வில்லன் குரூப்பை பிடிக்க ஸ்கெட்ச் போடும் போலீஸ் என பரபரவென ஆக்சன் திரைக்கதை அமைத்திருக்கிறார் முருகதாஸ்.
இந்த படத்திற்கு பெரிய அளவில் புரமோஷன் செய்யப்படவில்லை. அதிக போஸ்டர்களை வெளியிடவில்லை. படத்தை பில்டப் செய்து சிவகார்த்திகேயனோ, முருகதாஸோ எந்த ஊடகத்திலும் பேசவில்லை. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் கூட யாரும் பில்டப் செய்யவில்லை.
இதனால் இந்த படத்தின் டிக்கெட் முன்பதிவு மந்தமாகவே இருந்தது. எனவே படம் பாக்ஸ் ஆபிஸில் ஹிட்டடிக்குமா என்கிற சந்தேகம் பலருக்கும் வந்தது.
ஆனால், நேற்று முதல் காட்சி வெளியான பின்னர் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்தது. படத்தில் காதல் மற்றும் ஆக்சன் காட்சிகள் அசத்தலாக இருப்பதாகவும், சிவகார்த்திகேயன் சிறப்பாக நடித்திருப்பதாகவும், ஏ.ஆர் முருகதாஸுக்கு கண்டிப்பாக மதராஸி ஒரு கம்பேக் படம் என்றும் விமர்சகர்களும், ரசிகர்களும் பேசினார்கள்.

நேற்று மதராஸி திரைப்படம் தமிழ்நாட்டில் 9.8 கோடி, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 1.4 கோடி, கேரளாவில் 85 லட்சம், கர்நாடகாவில் 57 லட்சம், மற்ற மாநிலங்களில் 1.5 கோடி மற்றும் வெளிநாடுகளில் 4.7 கோடி என உலக அளவில் 18.52 கோடி மட்டுமே வசூல் திறந்ததாக சொல்லப்பட்டது.
எனவே இப்படம் சூப்பர் ஹிட் அடிக்குமா என்கிற கேள்வி பலருக்கும் எழுந்தது. ஆனால் முதல் காட்சிக்கு பின்னரில் இருந்தே படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்ததால் 2வது நாளில் இப்படத்தின் டிக்கெட் முன்பதிவுட்டு அதிகரித்திருக்கிறது. இப்படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.
நாளைக்கு ஞாயிறு என்பதால் கண்டிப்பாக இந்த மூன்று நாளில் மதராஸி திரைப்படம் 50 கோடி வசூலை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்கார் படத்திற்கு பின் முருகதாஸுக்கு ஹிட் படம் அமையவில்லை. எனவே அவருக்கு மதராஸி கைகொடுக்கும் என கணிக்கப்படுகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


