மத்தவங்க காஸ்ல உதவல, கேப்டன் சொன்ன மாதிரிதான்.. நெகட்டிவ் ரிவ்யூகளுக்கு கேபிஒய் பாலா பதிலடி

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு சீசன் 6 டைட்டில் வின்னர் தான் பாலா. தனது அனல் பறக்கும் பேச்சால் கவுண்டர் அட்டாக் செய்து காமெடி பன்ச்சால் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைப்பார். இவருக்கு ’பன்ச் பாலா’ என்ற பெயரும் இருக்கிறது.

ஒரு காலகட்டத்தில் விஜய் டிவியின் எல்லா நிகழ்ச்சிகளிலும் பாலாவை பயன்படுத்த தொடங்கி விட்டனர். பாலா இல்லாத நிகழ்ச்சியே விஜய் டிவி கிடையாது என்ற நிலை இருந்தது. அந்த அளவிற்கு பாலா தனது தனித்திறமையினால் உயர்ந்திருந்தார். தொடர்ந்து தன்னுடைய பாணியில் கலக்கிக் கொண்டிருந்த பாலாவுக்கு அவர் எதிர்பார்த்தது போலவே வெள்ளித்திரியிலும் வாய்ப்பு கிடைத்தது.

சின்ன சின்ன கதாபாத்திரங்கள், காமெடி வேடங்கள் என தனக்கு கிடைக்கப்பெற்ற வாய்ப்புகளை முறையாக பயன்படுத்திக் கொண்டார். அப்படிப்பட்ட நிலையில் ஒரு கலைஞன் தனக்கு வரும் படங்களில் நடித்து அடுத்த கட்டங்களுக்கு நகர்வது மட்டுமின்றி அப்படி வரும் பணத்தை சேமித்து வைத்து வீடு, கார், நிலம் என முதலீடு செய்வது தான் பலரின் வழக்கமாக இருக்கும். ஆனால் கே பி ஒய் பாலா தனக்கு கிடைக்க கூடிய பணத்தில் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.

#image_title

பாலாவுக்கு பின்னாடி ஏதோ அரசியல் சக்தி உள்ளது என்றும் கூடிய சீக்கிரமே ஏதோ ஒரு கட்சிக்கு வாக்கு சேகரிக்கப் போகிறார் என்றும் விமர்சனங்களும் நல்லது செய்பவருக்கு எதிராக கிளம்பும் பிரச்சனைகளும் கேபிஒய் பாலாவுக்கு எதிராக குவிய ஆரம்பித்து வருகின்றன.

அதெல்லாம் கண்டுக்கொள்ளாமல், தனக்கு எந்த கட்சியும் தெரியாது என்றும் அரசியல் நோக்கத்துக்காக இதெல்லாம் செய்யவில்லை என அதிரடியாக கூறி வரும் பாலா தொடர்ந்து தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.

இந்நிலையில் வெள்ளித்திரையில் ஹீரோவாகும் பாலாவின் கனவு ”காந்தி கண்ணாடி” படத்தின் மூலம் நிறைவேறி உள்ளது. அந்த வகையில் படம் எமோஷனல் ட்ராமாவாக இருக்கிறது. பாலா நடிப்பு பிரமாதம் என்று விமர்சனங்கள் இவருக்கு வந்து கொண்டிருக்கிறது. ஆனால் இவர் செய்கின்ற உதவி அனைத்தும் இவரின் சொந்த செலவில் பண்ணவில்லை. மத்தவங்க கிட்ட கேட்டு தான் செய்கிறார் என்று பல நெகட்டிவ் விமர்சனங்கள் வருகிறது.

அதற்கு பாலா இன்று பதிலடி கொடுத்துள்ளார். அதில்,” நான் என் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு கடினமா உழைத்து, இதுவரைக்கும் நான் செய்கின்ற உதவிகள் என்று கூட அதை சொல்ல மாட்டேன். என்னுடைய கடமைகளை எல்லாம் என் சொந்த பணத்தில் மட்டும் தான் செய்கிறேன். இதுவரைக்கும் நான் யாரிடமும் ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை. இனிமேலும் வாங்க மாட்டேன். நான் சம்பாதிக்கும் பணத்தில் மட்டும் தான் என்னுடைய கடமைகளை செய்து வருவேன்”.

”நெகட்டிவ் விமர்சனம் பரப்புவோர்களுக்கு மக்களே பதில் சொல்லி விடுகிறார்கள். வேற எதுவும் எனக்கு சொல்ல தோணல. கேப்டன் விஜயகாந்த் சார் சொன்ன மாதிரி தான் நாம் ஒரு குறிக்கோளை நோக்கி போய்க்கொண்டு இருக்கும்போது மற்ற விஷயங்களை இந்த காதில் வாங்கி அந்த காதில் தள்ளிவிட வேண்டும். நான் இன்று இவ்வளவு வளர்ந்ததற்கு காரணம் தமிழ்நாட்டு மக்கள் எனக்கு போட்ட பிச்சைதான். அதை என்றும் மறக்க மாட்டேன். அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்”. என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.