ரெண்டு படம் ஓடுனதும் புத்திய காட்டிட்டாரு.. ஆணவத்தால் அழியும் விஷால்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். ஒரு ஆக்சன் ஹீரோவா தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தாலும் இன்று தொடர் தோல்வினால் தமிழ் சினிமாவில் தடுமாறி வருகிறார். அப்படி தடுமாறிய விஷாலை ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் வெளியான ”மார்க் ஆண்டனி” திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி கொடுத்து மார்க்கெட்டில் திரும்ப வந்தார்.

#image_title


அதன் பிறகு இந்த ஆண்டு பொங்கல் அன்று வெளியான ”மதகஜராஜா” திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்து தமிழ் சினிமாவில் பழைய நிலைமைக்கு திரும்பினார். இந்நிலையில் விஷால் தனது 35 வது திரைப்படம் ஆன ”மகுடம்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பு தளத்தில் இயக்குனருக்கும் விஷாலுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கூறியுள்ளார் மேலும் அதில்

“ ஊட்டியில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கையில் இயக்குனருக்கும் விஷாலுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாக படபிடிப்பு தளத்தில் இருந்தவர்கள் தகவல் தெரிவித்தார்கள். இயக்குனர் பேச்சைக் கேட்காமல் விஷால் அவர் இஷ்டத்துக்கு படத்தை எடுக்க சொல்கிறார். ஆனால் இயக்குனர் ரவியரசு அதற்கு ஒப்புக் கொள்ளாமல் தனது எதிர்ப்பை தெரிவிக்கிறார். இதனால் விஷால் ஒரே வாரத்தில் பேக்கப் செய்து சென்னை வந்துள்ளார்”.

#image_title

”ரவி அரசு இதற்கு முன் அதர்வாவை வைத்து ஈட்டி,ஐங்கரன் போன்ற படத்தை கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு நல்ல இயக்குனர் தான் அதற்கு அவர் எடுத்த படங்களே சாட்சி. சென்னையில் இதன் படப்பிடிப்பு ஒரே ஒரு நாள் நடந்திருக்கு அதுவும் அன்று இயக்குனர் இல்லாமல் நடைபெற்று உள்ளது. விஷாலே டைரக்ட் செய்துள்ளார். இதனால் இயக்குனர் ரவி அரசு பயங்கரமான அழுத்தத்திற்கு போய்விட்டார் என்று யூனிட்டில் இருந்தவர்கள் சொல்கிறார்கள்”.

”இது முற்றிலும் உண்மையான தகவல் தான். நடிகர்கள் தொடர்ந்து இந்த மாதிரி கதை தலையீடுகள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். பெரிய பெரிய நடிகர்களின் படங்கள் தோல்வி அடைவதற்கு இதுவும் ஒரு காரணம்தான். விஷாலுக்கு இது முதல் தடவை கிடையாது இதுவரை நடித்த பல படங்களில் இந்த மாதிரி இயக்குனருடன் ஈகோ கிளாஸ் வந்திருக்கிறது. துப்பறிவாளன் 2 திரைப்படத்தில் மிஷ்கினுக்கும் விஷாலுக்கும் ஏகப்பட்ட ஈகோ கிளாஸ் ஏற்பட்டது”.

”அந்த படத்தின் தயாரிப்பாளரும் விஷால்தான் இருந்தாலும் பல நஷ்டங்களை சந்தித்தார். மகுடம் படத்தின் தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரி இவர் ஏற்கனவே விஷாலுக்கு வேற ஒரு படத்திற்கு பைனான்ஸ் செய்திருக்கிறார் அந்த பணத்தை எப்படி திரும்ப வாங்குவது என்று நினைத்து இவரை வைத்து ஒரு ப்ராஜெக்ட் ஆரம்பிக்கலாம் என்று மகுடம் திரைப்படத்தை ஆரம்பித்துள்ளார்”.

”அவரும் விஷாலிடம் பேச முயன்று வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இருப்பினும் விஷால் தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை. அவர் வெளியே வந்து என்ன பிரச்சனை என்று எடுத்து கூறினால் அதற்கு ஏற்றார் போல் இயக்குனரும், தயாரிப்பாளர் செயல்படுவார்கள் விஷாலும் அடுத்த கட்டத்திற்கு நகர்வார். இல்லையென்றால் இந்த கிளாஸ் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்”. என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.