Madharaasi: No ஹைப்.. No பில்டப்… சொல்லி அடித்த முருகதாஸ்… இவர்கிட்ட கத்துக்கணும்!..
Madharasi: இப்போதெல்லாம் ஒரு திரைப்படத்தை வெற்றி பெற வைக்க வேண்டுமெனில் அதற்கு பல வகைகளும் புரமோஷன் செய்ய வேண்டி இருக்கிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக், ஃபர்ஸ்ட் சிங்கிள், செகண்ட் சிங்கள், டீசர், டிரெய்லர் வெளியிட வேண்டும். இது மட்டுமில்லாமல் இசை வெளியீட்டு விழாவையும் நடத்த வேண்டும். அந்த விழாவில் படத்தின் நடிகர், நடிகை, இயக்குனர் இசையமைப்பாளர் என எல்லோரும் கலந்து கொண்டு படத்தைப் பற்றி பேசுவார்கள்.
இப்போதெல்லாம் பெரிய நடிகர்களின் படங்கள் பல மொழிகளிலும் பேன் இந்தியா படமாக வெளியாகிறது, எனவே கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மும்பை போன்ற மாநிலங்களுக்கும் சென்று புரமோஷன் செய்ய வேண்டும். அப்போதுதான் படம் வசூலை பெறும். அதேநேரம் படத்தைப் பற்றி ஓவராக பேசி ரசிகர்கள் மனதில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ரசிகன் படம் பார்க்கும் போது அதை படம் பூர்த்தி செய்யாவிட்டால் படம் நெகட்டிவ் விமர்சனங்களை பெறும். அதாவது படத்திற்கு கொடுக்கப்படும் அதிக ஹைப் மற்றும் புரமோஷன் அந்த படத்தின் வெற்றியை பாதிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

ஷங்கரின் இந்தியன் 2, சூர்யாவின் கங்குவா, மணிரத்தினத்தின் தக் லைப் ஆகிய படங்கள் இந்த பிரச்சனையை தான் சந்தித்தன. இந்த 3 படங்களுக்கும் அதிக அளவில் புரமோஷன் செய்யப்பட்டது. பெரிய பில்டப் ஏற்றினார்கள். இதனால் படத்திற்கு மிகப்பெரிய ஹைப் உருவானது. ஆனால் அந்த படங்கள் ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை. எனவே சமூகவலைத்தளங்களில் பலரும் ட்ரோல் செய்தார்கள். இதுவே படத்தின் வசூலையும் பாதித்தது.
இதை புரிந்துகொண்ட ஏ.ஆர் முருகதாஸ் சிவகார்த்திகேயனை வைத்து இயக்கிய மதராஸி படத்திற்கு பெரிய அளவில் புரமோஷனை செய்யவில்லை. ஒரே ஒரு இசை வெளியீட்டு விழா மட்டும் நடந்தது. அதன்பின் சிவகார்த்திகேயன் மட்டும் கேரளா, ஆந்திரா சென்று படத்தில் புரமோஷன் செய்தார். அவ்வளவுதான்.. மற்றபடி எதுவும் செய்யவில்லை. இப்படி பெரிய புரோமோஷன் இல்லாமல் இன்று காலை வெளியான மதராஸி திரைப்படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது.

படத்தின் முதல் பாதி காதல் மற்றும் ஆக்சன் கலந்தும், இரண்டாம் பாதி முழுக்க ஆக்சன் காட்சிகள் அசத்தலாக இருப்பதாகவும், படம் சிறப்பாக இருப்பதாகவும், ஏ.ஆர் முருகதாஸுக்கு மதராஸி நல்ல கம்பேக் படமாக அமைந்திருப்பதாகவும் சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.
வருகின்ற விமர்சனங்களை பார்க்கும்போது அமரனுக்கு பின் சிவகார்த்திகேயனுக்கு மதராஸி ஒரு ஹிட் படமாக அமையும் என்று கணிக்கப்படுகிறது. இதிலிருந்து ஒரு படம் நன்றாக இருந்தால் புரமோஷன் பெரிய அளவில் செய்யப்படவில்லை என்றாலும் ரசிகர்கள் வரவேற்பு கொடுப்பார்கள் என்பது தெரிய வந்திருக்கிறது. இதை மற்ற தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், நடிகர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


