பாசிட்டிவ் ரிவ்யூவால் பத்திக்கிச்சே!.. மதராஸி முதல் நாள் வசூல் எவ்வளவு?..
Madharaasi: பல வருடங்களாகவே காதல் கலந்த காமெடி படங்களில் மட்டுமே நடித்து வந்த சிவகார்த்திகேயன் அமரன் படம் மூலம் சீரியசான கதாபாத்திரங்களிலும் நடிக்க துவங்கினார். அந்த படம் வெற்றி பெற்று 300 கோடி வரை வசூல் செய்தது. எனவே சிவகார்த்திகேயனின் சம்பளம் 60 முதல் 70 கோடியாக உயர்ந்திருக்கிறது. மேலும் நல்ல கதைகள், பெரிய இயக்குனர்கள், பெரிய தயாரிப்பாளர்கள் நிறுவனங்கள் என பயணிக்க முடிவெடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். ஏற்கனவே சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். இது இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டம் பற்றிய கதையாகும்.
ஒருபக்கம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி என்கிற படத்தில் நடித்து அந்த படம் இன்று காலை உலகமெங்கும் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு பெரிய அளவில் புரமோஷன் செய்யப்படவில்லை. பில்டப்போ, ஹைப்போ ஏற்றவில்லை. ஆடியோ லான்ச் மட்டும் நடந்தது. கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு சிவகார்த்திகேயன் சென்று புரமோஷன் செய்தார். அதோடு சரி.
இந்த படத்தின் டிக்கெட் முன்பதிவு மூன்று நாட்களுக்கு முன்பு துவங்கிய போது பெரிய வரவேற்பு இல்லை. பல தியேட்டர்களிலும் இருக்கைகள் காலியாக இருந்தது. எனவே முன்பதிவே இப்படி இருக்கிறது.. படம் வசூலை பெறுமா? என்கிற சந்தேகம் பலருக்கும் வந்தது. ஆனால் நடந்ததோ வேறு. இன்று முதல் காட்சி வெளியான உடனேயே படம் பார்த்தவர்கள் பலரும் படத்தைப் பற்றி பாசிட்டிவாக பேசி வருகிறார்கள்.

எஸ்.கே சிறப்பாக நடத்திருக்கிறார். அவரின் கதாபாத்திரம் வித்தியாசமாக இருக்கிறது. நடிப்பில் முன்னேறி இருக்கிறார். கஜினி, துப்பாக்கி போல ஒரு அசத்தலான கதை, திரைக்கதையை முருகதாஸ் அமைத்திருக்கிறார். காதல் காட்சிகளும் சரி.. அசத்தலான ஆக்சன் காட்சிகளும் சரி.. சிறப்பாக இருக்கிறது என சொல்லி வருகிறார்கள்.
படம் நன்றாக இருப்பதாக விமர்சனங்கள் வருவதால் கண்டிப்பாக அடுத்தடுத்த காட்சிகளும் ரசிகர்கள் புக் செய்து பார்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மதராஸி ஃப்ரீ சேல்ஸ் உலகம் முழுவதும் சேர்த்து 8 கோடி சொல்லப்பட்டது. ஆனால் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வருவதால் எப்படியும் இப்படம் முதல் நாளில் 25 கோடி முதல் 30 கோடி வரை வசூல் செய்யும் என சொல்லப்படுகிறது.
இதுபோக அடுத்த 2 நாட்கள் வார இறுதி என்பதால் எப்படியும் படம் நல்ல வசூலை பெறும். அதன்பின் அடுத்த ஒரு வாரமும் கண்டிப்பாக வசூலை குவிக்கும். எனவே மதராஸி சிவகார்த்திகேயனுக்கு ஒரு ஹிட் படமாக அமைவதோடு முருகதாஸுக்கும் ஒரு கம்பேக் படமாக அமையும் என்று நம்பப்படுகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


