இந்த படமும் துப்பாக்கிதான்!.. மதராஸி பாத்துட்டு எஸ்.கே கொடுத்த பேட்டி…
Madharasi: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து பக்கா ஆக்சன் படமாக வெளிவந்திருக்கிறது மதராஸி. இந்த திரைப்படம் இன்று காலை உலகமெங்கும் வெளியானது. முதல் காட்சி வெளியானது முதல் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. முதல் பாதியில் காதல் கலந்த ஆக்சனும், இரண்டாம் பாதியில் முழுக்க ஆக்சனும் கலந்து கதை திரைக்கதை அமைத்திருக்கிறார் முருகதாஸ்.
ஆக்சன் விரும்பிகளுக்கு மதராஸி நல்ல விருந்து.. அமரனுக்கு பின் கண்டிப்பாக இப்படம் சிவகார்த்திகேயனுக்கு ஒரு ஹிட் படமாக அமையும்.. வழக்கமான காதல் கலந்த காமெடிகளை விட்டுவிட்டு வித்தியாசமான சீரியசான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.. அது நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.. ஒவ்வொரு படத்திலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் புது பரிணாமங்களை தொட்டு வருகிறார்.. அது மதராஸி படத்திலும் நடந்திருக்கிறது என ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.
துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்த வித்யூத் ஜம்வால் மதராஸி படத்திலும் வில்லனாக நடித்திருக்கிறார். அதேபோல் சார்பட்டா பரம்பரையில் டான்சிங் ரோஸாக வந்த சபீர் இந்த படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்திருக்கிறார். வில்லன் கும்பலுக்கும் போலீசாருக்கும் நடுவில் தன் காதலிக்கும் பெண்ணும் அவரின் குடும்பமும் சிக்கிக் கொள்ள சிவகார்த்திகேயன் அவர்களை எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் படத்தின் கதை. எனவே இரண்டாம் பாதியில் முழுக்க அசத்தலான சண்டை காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. அதோடு படத்தின் ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசையும் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சத்யம் தியேட்டரில் முதல் காட்சியை ரசிகர்களுடன் பார்த்த சிவகார்த்திகேயன் படம் முடிதந்து செய்தியாளர்களிடம் செய்தியாளர்களிடம் பேசும்போது ‘படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கு. ரசிகர்கள் என்ஜாய் செய்கிறார்கள்.. இங்கெல்லாம் கைத்தட்டல் வந்தால் நன்றாக இருக்கும் நாங்கள் எந்த காட்சிகளை நினைத்தோமோ அங்கெல்லாம் ரசிகர்கள் கைதட்டுகிறார்கள். தியேட்டரில் வந்து படம் பாருங்கள்.. உங்களுக்கு பிடிக்கும்’ என்று சொன்னார். அப்போது ஒரு செய்தியாளர் ‘நீங்கள்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ன சொல்கிறார்களே’ என கேட்டதற்கு ‘ஒரே ஒரு சூப்பர்ஸ்டார். அது ரஜினி சார் மட்டும்தான்’ என்று சொன்னார் எஸ்.கே.
அதேபோல் ‘விஜய் உங்களுக்கு துப்பாக்கி கொடுத்தாரே’ என கேட்டதற்கு ‘அது எனக்கு மறக்க முடியாத அனுபவம்’. இந்த படமும் துப்பாக்கி பற்றிய கதைதான்’ என சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


