இன்னும் 7 நாட்களில் ‘அந்த 7 நாட்கள்’!.. ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறுதே!…

Antha7naatkal: தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படமாக அந்த 7 நாட்கள் இருக்கிறது இந்த படம் வருகிற செப்டம்பர் 12ஆம் தேதி பல தியேட்டர்களிலும் வெளியாகவுள்ளது. ரொமான்டிக் திரில்லர் வகையை சேர்ந்த இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி சில மணி நேரங்களிலேயே ரசிகர்களின் கவனத்தை பெற்றது. டிரெய்லரை பார்க்கும்போது படம் எப்படி இருக்கும் என்கிற ஆர்வம் ரசிகர்களிடம் ஏற்பட்டு இருக்கிறது. டிரெய்லரே ரசிகர்களை தியேட்டருக்கு அழைத்து வரும் என நம்பப்படுகிறது.

இந்தப் படத்தில் நடித்துள்ள புது முகங்களான அஜிதேஜ் மற்றும் ஸ்ரீஸ்வேதா இருவரும் இப்படத்தின் சிறப்புகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இவர்களின் திரைப் பொருத்தம் ரசிகர்களுக்கு ஒரு புதுமையான அனுபவத்தை கொடுக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. அவர்களின் இயல்பான நடிப்பு மற்றும் காதல் காட்சிகளில் அவர்கள் காட்டும் முக பாவனைகள் பார்வையாளர்களுக்கு புதிய உணர்வை தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

antha 7 naatkal
antha 7 naatkal

திரைக்கதை ஜாம்பவானான இயக்குனர் கே.பாக்யராஜ் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருப்பதும் படத்தின் பலமாக பார்க்கப்படுகிறது. திரையில் பாக்கியராஜை பார்க்கும் ரசிகர்களுக்கு பழைய நினைவுகள் மீண்டும் திரும்பும். அவரின் அனுபவமும் நடிப்பும் ரசிகர்களுக்கு பரிசாக அமையும். அந்த 7 நாட்கள் படத்தில் தொழில் நுட்ப அணி மிகவும் வலுவாக அமைந்திருக்கிறது. எம் சுந்தரின் இயக்கம், முரளி கபீர்தாஸின் தயாரிப்பும், கோபிநாத் துரையின் ஒளிப்பதிவு, முத்தமிழன் ராமுவின் எடிட்டிங், சச்சின் சுந்தரின் இசை என அவர்களின் பங்களிப்பு அந்த 7 நாட்கள் படத்தை ஒரு தரமான சிறந்த படமாக மாற்றி இருக்கிறது.

இப்படத்தில் இடம்பெற்ற ‘ரதியே ரதியே’ பாடல் ஹரிச்சரன் குரலில் மோகன் ராஜா பாடல் வரிகளில் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்று ட்ரெண்டிங்கில் இருக்கிறது. இந்த பாடலும் படத்தின் மீது எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. இந்த பாடலும், நேற்று வெளியான டிரெய்லரும் படத்தின் மீது பாசிட்டிவான கருத்துக்களை உருவாக்கி உள்ளது. ரொமான்டிக் த்ரில்லர் வகையில் அந்த 7 நாட்கள் ரசிகர்களிடம் ஹைப்பை உருவாக்கி இருக்கிறது.

இன்னும் ஏழு நாட்களில் அதாவது செப்டம்பர் 12ஆம் தேதி அந்த 7 நாட்கள் ரிலீஸாகி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.