Siragadikka Aasai: மீனா, முத்து கைக்கு வந்த கிரிஷ்… ஆனா ரோகிணி பையன் ஓவர் தெளிவுதான்!
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
ரோகிணி மீனாவுக்கு கால் செய்து ஒரு பூ டெக்கரேஷன் ஆர்டர் கேட்டாங்க. எவ்வளவு செலவாகும் எனக் கேட்கிறார். மீனாவும் ஒரு 50 ஆயிரம் கிட்ட ஆகும் என்கிறார். கஷ்டப்படுறவங்கனா கம்மி பண்ணிக்களாம் என பேசுகிறார்.
அதுமட்டுமல்லாமல் ரோட்டில் கிரிஷ் போல ஒரு பையன் யாருடனோ காரில் ஏறி சென்றதாகவும், பார்த்ததாகவும் சொல்ல மீனா நானும் பார்த்தேன் என்கிறார். ஆனால் அவனை பிடிக்கவே முடியலை என்கிறார் மீனா. ரோகிணி அவனானு தெரியலை. அதற்குள் கார் கிளம்பி போய்விட்டதாக சொல்லி சமாளித்து விடுகிறார்.
ரோகிணி கிரிஷ் அங்கு போகலை. போனும் பண்ணலை என மகேஷ்வரியிடம் சொல்கிறார். மீனா வீட்டிற்கு முத்து வந்து விடுகிறார். வீட்டில் சீதா இருக்க அருண் அப்படி நடந்துக்கொண்டதற்கு மீனா அம்மா மன்னிப்பு கேட்க முத்து அதெல்லாம் ஒன்னும் இல்லை விடுங்க என்கிறார்.
சீதாவிடம் எதுவும் சண்டை போட்டியா எனக் கேட்க இல்ல அவரும் மன்னிப்பு கேட்டதாக சொல்கிறார். மீனாவை வீட்டில் விட்டு கார் டயர் பஞ்சர் போட சொல்வதாக சொல்லி கிளம்பி மீனாவின் பூக்களையை டிக்கியில் வைக்க சொல்ல அனுப்புகிறார் மீனா.
மீனாவும் நான் கிளம்புறேன் எனக் கூறி செல்ல குடும்பமே கீழே இறங்கி வருகின்றனர். எல்லாரும் கிரிஷ் குறித்து பேசிக்கொண்டு வருகின்றனர். சரியாக டிக்கியை திறக்க அங்கு கிரிஷ் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர்.

கிரிஷை தூக்கி தட்டி எழுப்ப பார்க்க அவர் எழும்பாமல் இருப்பதால் டாக்டரிடம் தூக்கி கொண்டு செல்கின்றனர். ரோகிணி, காரில் மகேஷ்வரியுடன் காரில் அழுதுக்கொண்டே செல்கிறார். கிரிஷை அம்மா கூட்டிக்கிட்டு போயிருப்பாங்களே எனக் கேட்க ரோகிணி அவங்க அழைச்சிட்டு போயிருக்கவே மாட்டாங்க என்கிறார்.
ரோகிணி கிரிஷ் ஸ்கூல் தான் இதுக்கு பொறுப்பு. அங்க போய் கேட்போம் எனக் கூற இருவரும் ஸ்கூலுக்கு செல்கின்றனர். டாக்டர் கிரிஷை செக் செய்துக்கொண்டு இருக்கிறார். கிரிஷ் புலம்புகிறார். அவர் அம்மா பெயர் என்ன எனக் கேட்க தன்னுடைய அம்மா பெயரை கல்யாணி எனக் கூறிவிடுகிறார்.
ஸ்கூலுக்கு வரும் மகேஷ்வரி கிரிஷை உடனே கண்டுபிடிங்க. நான் வெளியே வெயிட் செய்கிறேன் என ரோகிணியுடன் வந்து நிற்கிறார். கிரிஷை மீனா வீட்டுக்கு அழைத்து செல்லும் முத்து, அவரிடம் என்ன ஆச்சு எனக் கேட்க தான் படிக்கும் பள்ளி விவரத்தை மட்டும் சொல்கிறார். முத்து அங்கேந்து ஓடி வர அளவு என்ன ஆச்சு எனக் கேட்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


