Madharasi Review:‘மதராஸி’யை இந்த படத்தோட கம்பேர் பண்ணிட்டீங்களேடா? இதுக்கு நல்லா இல்லைனே சொல்லியிருக்கலாம்

Madharasi Review: முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து இன்று வெளியாகி உள்ள திரைப்படம் மதராஸி. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடித்திருக்கிறார். வித்யூத் இந்த படத்தில் மெயின் வில்லனாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் விக்ராந்த், ஷபீர், பிஜு மேனன் என பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். அமரன் திரைப்படத்தின் வெற்றியால் சிவகார்த்திகேயன் மீது ரசிகர்களுக்கு ஒரு பெரும் நம்பிக்கை இந்த படத்திலும் இருந்தது. அதனால் இந்த படத்தை எதிர்பார்த்து பெரிய அளவில் ரசிகர்கள் காத்திருந்தார்கள். இன்னொரு பக்கம் ஒரு பெரிய வெற்றியை கொடுத்து முருகதாஸுக்கும் நீண்ட நாட்கள் ஆகிவிட்டது.

அதனால் இந்த படம் அவருக்கு ஒரு பெரிய கம்பேக்காக இருக்குமா என்றும் அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர். அதனால் மதராஸி திரைப்படம் பிரம்மாண்டமாக இன்று ரிலீஸ் ஆகி உள்ளது. இன்று காலையிலிருந்து படத்தைப் பார்த்து அனைவரும் தங்களது விமர்சனங்களை தொடர்ந்து வலைதளத்தில் கொடுத்து வருகின்றனர். பாசிட்டிவான விமர்சனங்கள் வந்தாலும் படத்தை பார்த்த பலரும் இந்த படத்தை பற்றி நெகட்டிவ் கமெண்ட்களையும் கொடுத்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் இந்த படத்தில் எங்களை வச்சு செய்து விட்டார். பேசிக்கிட்டே இருக்காங்க. சீமராஜா 2 தான் இந்தப் படம். எங்களது பணம்தான் போச்சு, இப்படி ஏமாத்திட்டாரே சிவா அண்ணா என படம் பார்த்த அனைவருமே இந்த படத்தை பற்றி இவ்வாறு கருத்துக்களை கூறி வருகின்றனர். இருந்தாலும் இன்னும் இரண்டு மூன்று தினங்களில் படத்தின் உண்மையான நிலவரம் என்ன என்பது நமக்கு தெரிய வரும்.

seemaraja

ஒரு வேளை துப்பாக்கி 2 படமாக இருந்தால் நல்லா இருக்கும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தார்கள். கடைசியில் சீமராஜா 2 படத்தோட மதராஸி படத்தை ஒப்பிட்டு கூறியதுதான் அனைவருக்கும் ஒரே அதிர்ச்சி.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.