SAC: எம்ஜிஆரால் தாக்கப்பட்டாரா SAC? ராமாவரத்தில் நடந்தது என்ன? விஜய்க்கே தெரியாதா?
SAC: தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். தற்போது அரசியலில் முழுமூச்சாக இறங்கி விட்டார். அவருடைய நடிப்பில் கடைசியாக வெளியாக கூடிய திரைப்படம் ஜனநாயகன். இந்தப் படம் அடுத்த வருடம் பொங்கல் ரிலீஸ் ஆக வெளியாக இருக்கின்றது. சமீபத்தில் தான் தன்னுடைய இரண்டாவது மாநாட்டை மதுரையில் பெரிய அளவில் நடத்தி முடித்துள்ளார்.
லட்சக்கணக்கான பேர் அந்த மாநாட்டில் கூடியிருந்தனர். இதனைத் தொடர்ந்து தனது தேர்தல் பிரச்சாரத்தையும் திருச்சியில் தொடங்க இருக்கிறார் விஜய். இப்படி அரசியலில் அடுத்தடுத்து தன்னுடைய பயணத்தை ஆரம்பிக்கிறார் விஜய். மதுரையில் நடந்த மாநாட்டில் எம்ஜிஆரை மிகப்பெரிய அளவில் புகழ்ந்து பேசி இருந்தார். ஆனால் இன்னொரு பக்கம் எம்ஜிஆரால் தனக்கு என்ன நடந்தது என்பது பற்றி ஒரு காணொளியில் எஸ்ஏசி கூறி இருந்தது வைரலானது.
எம்ஜிஆர் நடித்துக் கொண்டிருந்த பொழுது ஒரு பாடல் காட்சியில் இவர் சரியாக பாடல் வரிக்கு ஏற்ப வாய் அசைக்காததால் எஸ்ஏசி ஒன்ஸ்மோர் கேட்டதாகவும் அதற்கு எம்ஜிஆர் இவரை நீ வருங்காலத்தில் பெரிய இயக்குனராக வருவாய் என்று பாராட்டியதாகவும் ஆனால் மறுநாளே அந்த படத்தில் இருந்து இவரை தூக்கி விட்டார்கள் என்றும் அந்த காணொளியில் அவர் பேசி இருந்தார்.
இதைப்பற்றி பிரபல தயாரிப்பாளர் பாலாஜி செந்தில் பிரபு இன்னொரு விஷயத்தையும் பகிர்ந்து இருந்திருந்தார். நீதிக்கு தண்டனை என்ற படத்தை எஸ்ஏசி இயக்க அந்த படத்திற்கு கதை வசனம் எழுதியவர் கருணாநிதி. அப்போது எம்ஜிஆர் உடைய ஆட்சி நடந்து கொண்டிருந்தது. அந்த படத்தில் இருக்கும் வசனங்கள் சமூக சீர்கேடுகளை மையப்படுத்தி அமைந்திருந்தது.
அதனால் இது அரசாங்கத்திற்கு எதிராக அமைந்து விடும் என்பதனால் அந்த படத்தை தடை செய்ய வேண்டும் என ஒரு வழக்கு போடப்பட்டது. ஆனால் அதை எதிர்த்து கருணாநிதி போராடி அந்த வழக்கை ரத்து செய்ததாக ஒரு செய்தி இருக்கிறது. அதனால் இதைப் பற்றி பேச எம்.ஜி.ஆர் எஸ்ஏசி ஐ தன்னுடைய ராமாவரத்திற்கு அழைத்தாராம். ராமாவரத்திற்கு எம்ஜிஆர் அழைத்து பேசுகிறார் என்றால் அங்கு பெரிய பிரச்சனை ஏற்பட்டு சில பேரை அவர் அடித்திருக்கிறார் என்றெல்லாம் செய்திகள் இருக்கின்றன.
அதனால் தான் எஸ்ஏசியும் அங்கு தாக்கப்பட்டிருப்பார் என்ற செய்தியும் வெளியானது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி இந்த படத்தை பற்றிய பிரச்சினையை பேசி முடித்ததாக தான் செய்திகள் இருக்கின்றன என செந்தில் பாலாஜி அந்தப் பேட்டியில் கூறி இருக்கிறார். ஆனால் இது விஜய்க்கு தெரியுமா தெரியாதா என்பதை பற்றி பேசுவதைவிட அந்த நேரத்தில் விஜய்க்கு 17 வயது இருக்கும். ஆனால் எஸ்ஏசி இதைப்பற்றி சமீபத்திய காணொளியில் பேசியிருப்பார். அதன் பிறகாவது விஜய்க்கு தெரியாமல் இருக்க முடியுமா என்றும் ஒரு கேள்வியை எழுப்பி இருக்கிறார் செந்தில் பாலாஜி.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


