கதையை படுத்துகிட்டு தான் கேட்பேன்.. ஸ்லீப்பிங் ஸ்டாரை ஓவர்டேக் செய்த யோகி பாபு

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் யோகி பாபு. ரஜினி, அஜித், விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்களின் பிஸியாக எடுத்துக் கொண்டு வருகிறார். தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களாக உயர்ந்த பின்னர் அனைவரும் அடுத்ததாக ஹீரோ ஆக வேண்டும் என்று நினைப்பார்கள்.

அப்படி யோகி பாபு கதாநாயகனாக சில படங்களில் நடித்து வெற்றி அடைந்துள்ளார். அப்படி இவர் நடித்ததில் மிக மிக முக்கிய திரைப்படமாக பார்க்கப்படுவது ”மண்டேலா”. இயக்குனர் அஸ்வின் இந்த படத்தை இயக்கியிருப்பார்.‌ இந்த படத்தின் கதையை நான் முதல் முதலில் எப்படி கேட்டேன் என்ற அனுபவத்தை பகிர்ந்துள்ளார் யோகி பாபு மேலும் அவர் கூறியதாவது, “சூட்டிங் முடித்துவிட்டு வரும்போது உடம்பு ரொம்ப டயர்டாக இருக்கும். ஒரு முறை இயக்குனர் அஸ்வின் என்னிடம் ஒரு கதை சொல்ல வந்தார்”.

#image_title

”நான் ஒரு தலகாணி எடுத்து போட்டு படுத்து விட்டேன். அப்படி நான் படுத்துக் கொண்டிருக்கையில் அவர் என் அருகில் இருந்து மண்டேலா படத்தின் கதை சொல்லிக் கொண்டிருந்தார். அதன் பிறகு இயக்குனர் அஸ்வினும் இயக்குனர் நெல்சனும் இந்த படம் உங்களுக்கு சூப்பரா செட் ஆகும் என்று ஏத்தி விட்டார்கள். நானும் ஒத்துக்கொண்டு படத்தில் நடித்திதேன். சில விஷயங்களுக்காக அந்த படத்தில் நடிக்க தயங்கினேன்”.

”அதன் பிறகு ஒரு ஓட்டை வைத்து நம்மால் இவ்வளவு காரியம் செய்ய முடியுமா யோசித்த பிறகு அந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தேன். படம் நான் எதிர்பார்த்ததை விட பெரிய அளவில் ஓடி வெற்றி பெற்றது. இந்த படம் இப்படி ஓடும் என்று நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. எனக்கு திடீரென்று ஒரு நாள் போன் கால் வந்தது மண்டேலா படத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ளது என்று அதைக் கேட்டதும் ரொம்ப சந்தோஷம் கிடைத்தது”.

”அது மட்டும் இல்லாமல் ஆஸ்கார் பரிந்துரை வரை சென்றது. இன்று நிறைய திறமையுள்ள அசிஸ்டன்ட் டைரக்டர்கள் இருக்கிறார்கள். என்னால் முடிந்த அளவிற்கு உங்களுக்கு உதவி செய்கிறேன். நான் அனைத்துக்கும் தயாராக உள்ளேன். சம்பளம் பற்றி எல்லாம் கவலை இல்லை பேசிக்கொள்ளலாம். வாருங்கள் நாம் இணைந்து படம் செய்யலாம்”. என்று மனதார அழைத்துள்ளார் யோகி பாபு.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.